நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், பின்னணி பாடகர் என பன்முகம் கொண்டர் பாலிவுட்டின் பிரபல நட்சத்திரம் பர்கான் அக்தர். பிரபல இந்தி பாடலாசிரியர் ஜவே அக்தரின் மகனான இவர் 1974ம் ஆண்டு ஜனவரி 9ம் தேதி பிறந்தார். ஆரம்பகாலத்தில் உதவி இயக்குநராக பணியாற்றிய பர்கான், தில் சக்தே ஹாய் என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். தொடர்ந்து ஷாரூக்கானை வைத்து டான் படங்களின் சீரியஸை இயக்கி முன்னணி இயக்குநராக உயர்ந்தார். சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் தொடங்கி பல வெற்றி படங்களை தயாரித்தார். இயக்குநர், தயாரிப்பாளராக இருந்த பர்கானை, ஒரு சிறந்த நடிகராக அடையாளம் காட்டிய படம் பாக் மில்கா பாக். ராக் ஆன், ஜிந்தகி நா மிலேகி தோப்ரா போன்ற படங்களில் பாடியும் உள்ளார். தேசிய விருதுகள், பிலிம்பேர் விருதுகள் உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார்.