Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » நட்சத்திரங்களின் பேட்டி »

தலைப்புக்காக மட்டும் மன்னிப்பு கேட்கிறேன் - தினேஷ்

05 மார், 2020 - 23:59 IST
எழுத்தின் அளவு:
Only-apologies-for-the-title

தன் ஒவ்வொரு படத்திலும் புதுப்புது பரிணாமத்தை காட்டிய தினேஷ், தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள தலைப்புடன் தயாராகியுள்ள படத்தில் நாயகனாக நடித்துஉள்ளார். இது குறித்து அவருடன் பேசியதிலிருந்து:


கிசுகிசுவில் கூட சிக்காத உங்களிடமிருந்து இப்படி ஒரு தலைப்புடன் படம் ஏன்?



நான் உண்டு... என் வேலை உண்டு என, இருப்பேன். என்னுடன் நடிப்பவர்களை, 100 சதவீதம் காதலித்து விடுவேன். உண்மையாக காதலித்து விடுவானோ என்ற பயமும் இருக்கலாம். ஜாம்பி வகை படம் இது. பல்லு பட்டால், ஜாம்பிஆகி விடுவர். அதனால் தான் சர்ச்சையான தலைப்பை வைக்க வேண்டியதாயிற்று. முதலில், படத்தின் தலைப்பை மாற்றினால் தான் நடிப்பேன் எனக் கூறி மறுத்து விட்டேன். இடையில் வேறு ஒருவர் நடிக்க, படப்பிடிப்பும் துவங்கியது. ஆனால், மீண்டும் எனக்கே அந்த படம் வந்தது. படத்திற்கான தலைப்பின் நோக்கம் சரியாக இருந்தது... அதனால் நடிக்க சம்மதித்தேன். தலைப்புக்காக மட்டும் மன்னிப்பு கேட்கிறேன்.


படத்தின் கதை என்ன?


காமெடியுடன் கூடிய ஜாம்பி வகை படம் இது. காட்டில் சிக்கிக் கொள்பவர்கள் தப்பிக்கும் கதை இது. விதவிதமான ஜாம்பிகள் படத்தில் உண்டு.


அறிமுக இயக்குனர்கள் படத்தில் நடிப்பது குறித்து?


ஒவ்வொரு படத்தில் நடித்து முடித்ததும், நாம் வேற லெவலுக்கு போவோம் என பார்த்தால், ஆரம்பித்த இடத்திலேயே நிற்பது போல் தான் இருக்கிறது. இயக்குனர்கள் எளிதில் கையாளக்கூடிய நடிகராக இருக்கிறேன். இதனால் எனக்கும் பலன் உண்டு; இயக்குனர்களுக்கும் பலன் உண்டு. இந்தப்படத்தில் வித்தியாசமான தினேஷை பார்ப்பீர்கள்.


மனம் கவர்ந்த நம்மூர் நாயகி யார்?



நிறைய பேர் உள்ளனர். அதற்காக, அட்டக்கத்தி மாதிரி நினைக்காதீர். கீர்த்தி, அபர்ணா பாலமுரளி, அனுபமா, தமன்னா என, பலரையும் பிடிக்கும்.இந்த படத்தில் கவர்ந்த விஷயம் எது? இரண்டாம் உலகப்போர் மீது எனக்கு ஒரு ஈர்ப்பு உண்டு. அது ஏன் எனத் தெரியவில்லை. இந்த படத்திலும், அதுபோன்ற ஒரு விஷயம் உள்ளது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
இண்டஸ்ட்ரியை அலற விடும் சாம்ஸ்!இண்டஸ்ட்ரியை அலற விடும் சாம்ஸ்! அதிகமான படங்களில் நடிப்பதை விட தரமான படங்களில் நடிக்கவே விரும்புகிறேன் - சிபிராஜ் அதிகமான படங்களில் நடிப்பதை விட ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in