Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » நட்சத்திரங்களின் பேட்டி »

முடியாதது எதுவுமில்லை: நடிகர் அருண் விஜய் பளீச்

23 பிப், 2020 - 12:36 IST
எழுத்தின் அளவு:
arunvijay-interview-about-mafia

தமிழ் சினிமாவில், பல போராட்டங்களுக்கு பின், தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர், நடிகர் அருண் விஜய். என்னை அறிந்தால், தடம் ஆகிய படங்களை தொடர்ந்து, அண்மையில் இவரது நடிப்பில் வெளியான, மாபியா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.கோவையில் உள்ள திரையரங்குகளுக்கு திடீர் விசிட் அடித்த நடிகர் அருண் விஜய், அளித்த பேட்டியில் இருந்து...



மாபியா படத்தில் நடித்த அனுபவம் எப்படி இருந்தது?


துருவங்கள் பதினாறுக்கு பிறகு, கார்த்திக் நரேனின் இரண்டாவது படத்தில் நடிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது. கதை கேட்டபோதே, வித்தியாசமான கோணத்தில் ரசிகர்களிடம் என்னை கொண்டு சேர்ப்பார் என்ற நம்பிக்கை வந்தது.


மாபியா இரண்டாம் பாகம் எப்போது வெளிவரும்?


மாபியா முதல் அத்தியாயத்திலேயே மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்து விட்டது. இதனால், இரண்டாம் பாகத்துக்கான எதிர்பார்ப்பு இன்னமும் கூடியுள்ளது. ஒரு நடிகனாக சவாலான உள்ளது. இயக்குனரிடமும் பேசியுள்ளேன். விரைவில் இரண்டாம் பாகத்துக்கான பணிகள் துவங்கப்படும்.


ரசிகர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?


முயற்சி செய்தால் முடியாதது எதுவுமில்லை. எந்த ஒரு காரியமாக இருந்தாலும் முழு உறுதியோடு போராடினால் நிச்சயம் வெற்றி நமதே.


இந்தியன்-2 படப்பிடிப்பு விபத்து குறித்து என்ன நினைக்கிறீர்கள்?


அது ஒரு விபத்தாக இருந்தாலும், ஈடுசெய்ய முடியாதது. அச்சமயத்தில், அருகில் எங்களுடைய படப்பிடிப்பும் நடந்து கொண்டிருந்தது. எதிர்காலத்தில், பாதுகாப்பு அம்சங்களில் கூடுதல் கவனம் செலுத்துவார்கள் என்று நம்புகிறேன்.


அடுத்து எந்தெந்த படங்களில் நடித்து வருகிறீர்கள்?


ஹரிதாஸ் படத்தின் இயக்குனர் குமரவேல் இயக்கத்தில் சினம், மூடர்கூடம் நவீன் இயக்கத்தில், விஜய் ஆண்டனியுடன் இணைந்து அக்னி சிறகுகள் என்ற படத்தில் நடித்து வருகிறேன்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
போலீஸ் கேரக்டர் எனக்கு நன்றாக பொருந்துகிறது!போலீஸ் கேரக்டர் எனக்கு நன்றாக ... ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்துவதே என் லட்சியம்! ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in