சுவாதி ரெட்டி — புகைப்படங்கள், படங்கள், சுயவிவரம் | தினமலர் சினிமா
Advertisement
Advertisement
சுவாதி ரெட்டி
🎂09 Apr 1987· 39 years
12
🎬Films
39
📷Photos
39
🎂Age
பற்றி
தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிகளில் பிரபலமான நடிகை சுவாதி ரெட்டி, 1987ம் ஆண்டு ஏப்ரல் 9ம் தேதி ரஷ்யாவில் பிறந்தார். சுவாதியின் தந்தை ரஷ்யாவில், கப்பற்படையில் பணியாற்றியபோது அவர் அங்கு பிறந்துள்ளார். பின்னர் மும்பை வந்து, பிறகு ஆந்திரா வந்துள்ளார். ஆரம்பகாலத்தில் கலர்ஸ் எனும் டி.வி. நிகழ்ச்சியை நடத்தி வந்தார், அதனாலேயே அவர் கலர்ஸ் சுவாதி என்று பிரபலமானார். டேஞ்சர் எனும் தெலுங்கு படத்தின் மூலம் சினிமா வாய்ப்பை பெற்ற சுவாதி, தமிழில் சுப்ரமணியபுரம் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். அப்படம் அவருக்கு பெயரை பெற்று தர, தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளிலும் ஒரு ரவுண்ட் வந்து கொண்டிருக்கிறார்.