பாலிவுட்டின் குணச்சித்திர நடிகர் அனுபம் கெர். 1955-ம் ஆண்டு மார்ச் மாதம் 7ம் தேதி சிம்லாவில் பிறந்தவர் அனுபம் கெர். காஷ்மீர் பண்டிட் குடும்பத்தை சேர்ந்த அனுபம் கெர், 1982ம் ஆண்டு ஆக்மன் என்ற படத்தின் மூலம் தனது சினிமா பயணத்தை துவங்கினார். தொடர்ந்து பல படங்களில் நடித்து பிரபலமானார். 100 படங்களுக்கு மேல் நடித்துள்ள அனுபம் கெர், 1985ம் ஆண்டு நடிகை கிரோனை திருமணம் செய்து கொண்டார். இரண்டு முறை தேசிய விருது, பிலிம்பேர் உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார். மேலும் 2004ம் ஆண்டு பத்மஸ்ரீ விருதும் பெற்றார். நடிகராக மட்டுமல்லா தயாரிப்பாளராகவும், இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார் அனுபம் கெர்.