மாதுரி தீட்சித் — புகைப்படங்கள், படங்கள், சுயவிவரம் | தினமலர் சினிமா
Advertisement
Advertisement
Actress
மாதுரி தீட்சித்
🎂15 May 1967· 59 years
7
📷Photos
59
🎂Age
பற்றி
பாலிவுட்டின் கனவு கன்னியாக வலம் வந்தவர் நடிகை மாதுரி தீட்சித். மகாராஷ்டிர மாநிலம், மும்பையில், 1967ம் ஆண்டு மே 15ம் தேதி பிறந்த மாதுரி, சிறந்த கதக் டான்சர். 1984ம் ஆண்டு அபோத் என்ற பெங்காலி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான மாதுரிக்கு, 1986ம் ஆண்டு வௌிவந்த சுவாதி, மான்வா ஹத்யா படங்கள் தான் அவரை அடையாளம் காட்டியது. அதன்பின்னர் தொடர்ச்சியாக பல வெற்றி படங்களில் நடித்து பாலிவுட்டின் உச்சத்திற்கு போனார். 80-90களில் நம்பர்-1 நடிகையாகவும், பாலிவுட்டின் கனவு கன்னியாகவும் வலம் வந்த மாதுரி, 1999ம் ஆண்டு, டாக்டரான ஸ்ரீராம் மாதவ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு சில படங்களில் நடித்து சினிமாவுக்கு முழுக்கு போட்டார். இப்போது மீண்டும் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்.