கீர்த்தி சுரேஷ் — புகைப்படங்கள், படங்கள், சுயவிவரம் | தினமலர் சினிமா
Advertisement
Advertisement
Actress
கீர்த்தி சுரேஷ்
🎂17 Oct 1992· 33 years
12
🎬Films
50
📷Photos
33
🎂Age
பற்றி
மலையாளத்திலிருந்து தமிழுக்கு இறக்குமதியாகியுள்ள இளம் நடிகை கீர்த்தி சுரேஷ். 1980களில் மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்த மேனகா, தமிழிலும் நெற்றிக்கண் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். இவரது மகள் தான் இந்த கீர்த்தி சுரேஷ். கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில், 1992ம் ஆண்டு அக்டோபர் 17ம் தேதி பிறந்தார் கீர்த்தி சுரேஷ். டில்லியில் பேஷன் டிசைனிங் முடித்துவிட்டு அப்படியே சினிமாவுக்கு வந்துவிட்டார். ஆரம்பகாலத்தில் தனது தந்தையின் தயாரிப்பில் உருவான சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த கீர்த்தி சுரேஷ், 2013ம் ஆண்டு கீதாஞ்சலி எனும் மலையாள படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். தொடர்ந்து மலையாளத்தில் சில படங்களில் நடித்தவர் அப்படியே தமிழுக்கும் வந்துவிட்டார்.
தமிழில் இவரது முதல் படம் இது என்ன மாயம். இப்படம் வௌிவரும் முன்பே அடுத்தப்படியாக ரஜினி முருகன், பாம்புசட்டை போன்ற படங்களில் நடித்தார் கீர்த்தி. விஜய், சூர்யா, விக்ரம் என தமிழில் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். தவிர மலையாளத்திலும், தெலுங்கிலும் நடித்து வருகிறார்.