ஜோதிகா — புகைப்படங்கள், படங்கள், சுயவிவரம் | தினமலர் சினிமா
Advertisement
Advertisement
ஜோதிகா
🎂18 Oct 1978· 47 years
10
🎬Films
50
📷Photos
47
🎂Age
பற்றி
1998ம் ஆண்டு தோலி சஜே கி ரஹ்னா என்ற இந்திய படத்தில் பிரியதர்ஷனால் அறிமுகப்படுத்தப்பட்டார் ஜோதிகா. இருப்பினும் அந்த படம் தோல்வி அடைந்தது. தொடர்ந்து 1999ம் ஆண்டு தமிழில் வாலி படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடத்தபடி தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். பின்னர் சூர்யாவுடன் அவர் நடித்த பூவெல்லாம் கேட்டுப்பார் படம் அவருக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தது. அதன் தொடர்ச்சியாக அவர் நடித்த குஷி, முகவரி, டும் டும் டும், சிநேகிதியே, தெனாலி, காக்க காக்க, திருமலை,மன்மதன், வேட்டையாடு விளையாடு உள்ளிட்ட படங்கள் சூப்பர் ஹிட்டாகி ஜோதிகாவை தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக்கியது. கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ஜோதிகா நடித்த சந்திரமுகி அவரது நடிப்பிற்கு பெரிய அளவில் பெயர் வாங்கிக் கொடுத்ததுடன் தமிழக அரசின் விருதையும் பெற்றுத் தந்தது. 3 முறை தமிழக அரசு விருது பெற்ற ஜோதிகா, கலைமாமணி விருதையும் பெற்றுள்ளார். கன்னடம், மலையாளம், தெலுங்கு, இந்திய என பல மொழிகளில் நடித்த ஜோதிகா 2006ம் ஆண்டு நடிகர் சூர்யாவை திருமணம் செய்து கொண்டார்.