நடிகர் நரேனின் சொந்த பெயர் சுனில் குமார். தமிழ் மற்றும் மலையாளத்தில் பல படங்களில் நடித்துள்ள இவர், 2002ம் ஆண்டு நிழல்குத்து என்ற மலையாள படத்தின் மூலம் சினிமாவிற்கு வந்தார். தமிழில், சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் அறிமுகமானார். சினிமாவில் நடிக்க வருவதற்கு முன் பல விளம்பர படங்களில் நரேன் நடித்துள்ளார். இதுவரை தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் 20க்கும் மேற்பட்ட படங்களில் நரேன் நடித்துள்ளார்.