ஸ்ருதிஹாசன் — புகைப்படங்கள், படங்கள், சுயவிவரம் | தினமலர் சினிமா
Advertisement
Advertisement
Actress
ஸ்ருதிஹாசன்
🎂28 Jan 1986· 40 years
12
🎬Films
50
📷Photos
40
🎂Age
பற்றி
நடிகை, பாடகி, இசையமைப்பாளர் என பன்முகம் கொண்டவர் ஸ்ருதிஹாசன். நடிகர் கமல்ஹாசன் - சரிகா தம்பதியரின் மூத்த வாரிசான ஸ்ருதிஹாசன், 1986ம் ஆண்டு ஜனவரி 28ம் தேதி, சென்னையில் பிறந்தார். கமலின் ஹேராம் படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்தார். அதன்பின் பாடகியாகவும், இசையமைப்பாளராகவும் தனது திரை பயணத்தை துவக்கிய ஸ்ருதி, ஏதேச்சையாக நடிகையாக மாறினார். லக் என்ற இந்தி படத்தில் ஹீரோயினாக அவதரித்தார். ஆனால் முதல் படம் அவருக்கு லக்காக அமையவில்லை. அதன்பின்னர் இந்தி சினிமாவை விட்டு தென்னிந்திய படங்களில் களமிறங்கினார். 7ம் அறிவு படம் தான் ஸ்ருதியின் முதல் தமிழ்படம். தொடர்ந்து 3. பூஜை படங்களில் நடித்தார். தமிழை காட்டிலும் தெலுங்கில் இவர் நடித்த கப்பார் சிங், பலுப்பு, ராமையா வஸ்தாவையா என தொடர் ஹிட் படங்களில் நடித்து டாப் நடிகையாக உயர்ந்தார். தற்போது தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.