10 நாட்களில் ரூ.25 கோடி வசூலைக் கடந்த ‛வித் லவ்' | மரகதநாணயம் 2 படம் தொடங்கியது | கில்லி மீண்டும் ரீ ரிலீஸ் ஆகிறது : மங்கத்தா சாதனையை முறியடிக்குமா? | இனி காமெடி படம் மட்டுமே...? இயக்குனர் பொன்ராம் முடிவு | சிவகார்த்திகேயனின் ‛சேயோன்' | பூவே உனக்காக படம் பிரசாந்த் நடிக்க வேண்டியதா? | இயக்குனர் விஜய்க்கு மறுவாழ்வு தருமா 'காதல்' | இப்ப வருமோ…எப்ப வருமோ….'ஜனநாயகன்' | இயக்குனர்கள் அடிமையாக இருக்கக் கூடாது : புது நிர்வாகிகள் பதவியேற்பு விழாவில் ஆர்கே செல்வமணி பேச்சு | பா.ஜ., தலைவரின் பேச்சுக்கு திரிஷா கண்டனம் : வருத்தம் தெரிவித்த நயினார் நாகேந்திரன் |

பிரபல சின்னத்திரை நடிகை மற்றும் தயாரிப்பாளர் நீலிமா ராணி. வாணி ராணி, கோலங்கள், தாமரை, செல்லமே, அத்திப்பூக்கள், தென்றல் போன்ற தொடர்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர். பண்ணையாரும் பத்மினியும், குற்றம் 23, நான் மகான் அல்லா, மொழி போன்ற படங்களில் நடித்துள்ளார். கடைசியாக விஷால் நடித்த சக்ரா படத்தில் நடித்தார். கணவருடன் இணைந்து சில சீரியல்களை தயாரிக்கவும் செய்தார்.
தன்னை விட 12 வயது மூத்த இசைவாணனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணமான 9 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு மகள் பிறந்தார். தற்போது இரண்டாவது முறையாக அம்மா ஆகிறார். தன் கணவர் குழந்தையுடன் இருக்கும் படத்தை இன்ஸ்ட்ராகிராமில் வெளியிட்டு அவர் எழுதியிருப்பதாவது:
இனிய ஆண்டு விழா பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சியாக இருக்கிறோம், ஜனவரி மாதத்தில் நாங்கள் நான்காகப் போகிறோம். 20 வாரங்கள் , இன்னும் 20 பயணங்கள் உள்ளன மகிழ்ச்சி. என்று கூறியிருக்கிறார்.




