‛ஜமா' இயக்குனரின் அடுத்த பட தலைப்பு ‛அன்பே டயானா' | எழுத்தாளரை மணந்தார் பாடகர் வேடன் | மீண்டும் நடிக்க வரும் ரம்பா | பிரியங்கா சோப்ராவின் தி பிளப் ஓடிடியில் வெளியானது | விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகாவுக்கு திருமண வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி | மார்ச் 6ல் ‛ஓ பட்டர்பிளை' ரிலீஸ் | ஜி.வி.பிரகாஷின் புதிய படங்கள் குறித்து தகவல் இதோ | பிளாஷ்பேக்: ஒரே படக்கதை; வெற்றியை சுவைத்த எம் கே ராதா... வீழ்ச்சியைக் கண்ட எம் ஜி ஆர் | ஆர்யா படத்தில் நடிக்கமாட்டேன்: அபர்ணதி சொன்னது ஏன்? | ஓடிடியிலும் வரவேற்பு பெற்ற ஆட்டோகிராப் : சேரன் மகிழ்ச்சி |

அபிஷேக், தேவயானி நடிக்கும் புதிய தொடர் புது புது அர்த்தங்கள். ஏற்கெனவே இந்த ஜோடி கோலங்கள் தொடரில் பாப்புலர் என்பதால் இந்த சீரியலுக்கு பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது.
இந்த சீரியலில் தேவயானியின் மாமனாராக பிரபல பட்டிமன்ற பேச்சாளரும், தி.மு.க கொள்கை பரப்பு செயலாளருமான திண்டுக்கல் லியோனி நடித்து வந்தார். தற்போது அவர் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக பாரதிராஜாவின் தம்பி ஜெயராஜ் நடிக்கிறார். ஜெயராஜ் ஏராளமான படங்களில் குணசித்ர வேடங்களில் நடித்துள்ளார்.
திண்டுக்கல் லியோனி தற்போது பாடநூல் கழக தலைவர் ஆகியிருப்பதால் அவரால் படப்பிடிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை அதனால் அவர் விலகி விட்டார் என்கிற ஒரு தகவலும், அவருக்கு நடிப்பு சரியாக வரவில்லை ஏகப்பட்ட டேக் வாங்குகிறார். இதனால் தேவயானி உள்ளிட்ட முக்கிய கலைஞர்களின் நேரமும், உழைப்பும் வீணாகிறது, அதனால் அவர் நீக்கப்பட்டார் என்கிற தகவலும் வெளியாகி உள்ளது.