ஆர்யா படத்தில் நடிக்கமாட்டேன்: அபர்ணதி சொன்னது ஏன்? | ஓடிடியிலும் வரவேற்பு பெற்ற ஆட்டோகிராப் : சேரன் மகிழ்ச்சி | 'தாய்கிழவி' நல்ல லாபம்; அடுத்தடுத்து படங்களை தயாரிக்கும் சிவகார்த்திகேயன் | சூரி, ரவிக்குமார் படத்தின் கதை என்ன தெரியுமா... | என்னை வேறொரு கோணத்தில் காட்டும் படம்: ஜதின் சர்னா | பாராட்டுகளை பெற்ற 'லிட்டில் விங்க்ஸ்': உயிரோடு இல்லாத இருவர் | தேசிய விருது பெற்ற தமிழ் குறும்படம் யு-டியூப்பில் வெளியாகிறது | 'ஹபீபி' படம் சாத்தியமாக 20 ஆண்டுகள் ஆனது : மீரா கதிரவன் | பிளாஷ்பேக்: இயக்குனராக போராடிய பஞ்சு அருணாசலம் | பிளாஷ்பேக்: அவ்வையாக நடித்த ஆண் நடிகர் |

தொகுப்பாளினியான ஜாக்குலின் சினிமா, சீரியல் என நடிகை அவதாரம் எடுத்தார். ஆனால், அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இந்நிலையில், அண்மையில் நிறைவுற்ற பிக்பாஸ் சீசன் 8 -ல் கலந்து கொண்டு சிறப்பாக விளையாடி வந்த ஜாக்குலின் மக்களின் பேராதரவை பெற்றிருந்தார். இருப்பினும் கடைசி வாரத்தில் எலிமினேட் ஆகி வெளியேறினார். தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து பல ஊடகங்களுக்கு பேட்டி அளித்து வரும் அவரிடம், ரசிகர் ஒருவர் 'நீ லெஸ்பியனா?' என்ற கேள்வியை முன் வைத்தார். அதற்கு பதிலளித்த ஜாக்குலின் 'இப்போதெல்லாம் பெண்கள் சேர்ந்து புகைப்படம் போட்டாலே அப்படி தான் சொல்கிறார்கள். இவர்கள் இப்படிதான் யோசிப்பார்களா? பைத்தியமா இவர்கள் என நினைக்க தோன்றுகிறது' என பதிலளித்துள்ளார்.