'மணிசித்திரதாழு' படத்தை 50 முறை பார்த்தேன்- போஸ்டருடன் செல்வராகவன் வெளியிட்ட பதிவு! | துருவ் விக்ரம் நடிக்கும் புதிய படத்தின் அப்டேட்டை வெளியிட்ட விக்ரம்! | கடற்கரையில் பிகினியில் நீராடும் கங்குவா நாயகி திஷா பதானி! | மீண்டும் இணைந்த விஜய் தேவரகொண்டா - தில் ராஜூ | தள்ளிப்போகும் இந்தியன் 2 ... அதே தேதியை குறிவைக்கும் ராயன்? | விஜய் 69வது படத்தை தயாரிக்கும் யஷ் பட தயாரிப்பாளர்? | ‛மஞ்சும்மல் பாய்ஸ்' படம் தந்த பாடம்: நடிகர் சித்தார்த் அருண்பாண்டியன் | கண்ணப்பா படப்பிடிப்பை நிறைவு செய்த அக்சய் குமார் | ஹீரோக்களுக்கு எதிராக ஹீரோக்களே வசனம் பேசும் புதிய ட்ரெண்ட் | தனது வருங்கால மனைவியை மோகன்லாலுக்கு அறிமுகப்படுத்திய காளிதாஸ் |
பிரபல நகைச்சுவை நடிகரான மயில்சாமியின் இரண்டாவது மகன் யுவன் மயில்சாமி சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்துள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகவுள்ள 'தங்க மகள்' தொடரில் யுவன் ஹீரோவாக நடிக்கிறார். அதேசமயம் திரையுலகிலும் சில படங்களில் நடித்து வரும் யுவன், ரஜினிகாந்த் நடிக்கும் லால் சலாம், வேட்டையன் ஆகிய படங்களிலும் அவருடன் இணைந்து நடித்துள்ளார்.
இந்நிலையில் ரஜினிகாந்தை சந்திக்க சென்ற யுவனை ரஜினிகாந்தின் உதவியாளர் அட்டக்கத்தி படத்தில் வரும் தினேஷ் என்று நினைத்து அழைத்து சென்று ரஜினிகாந்தை சந்திக்க வைத்தாராம். அப்போது ரஜினிகாந்த் யுவனை மறக்கமால் ஞாபத்தில் வைத்துக்கொண்டு தனது உதவியாளரிடம் இது மயில்சாமியின் மகன் யுவன் என்று கூறினாராம். இதை கேட்டதும் யுவனுக்கு ஏதோ விருது வாங்கிய மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக அண்மையில் அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளார்.