இந்த வார ஓடிடியில் வரிசைக்கட்டும் க்ரைம் த்ரில்லர் படங்கள்....! | நானி படத்தில் இணைந்த பிரித்விராஜ் | ஐஸ்வர்யா ரஜினி இயக்கும் ‛டெக்ஸ்லா' : யுவன் இசை | நடிகையுடன் உறவு: விவாகரத்து கேட்டு நடிகர் விஜய் மனைவி சங்கீதா மனு | மோடி, அமித்ஷாவிடம் வாழ்த்து பெற்ற விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா | சினிமாவில் அரசியல் பேசுவது தவறில்லை: சிவகார்த்திகேயன் | மலையாள இயக்குனர் டைரக்ஷனில் நடிக்கும் விக்ரம் | தேர்தல் நெருங்கும் வேளையில் முதல்வரை நேர்காணல் செய்த மோகன்லால் | ரசிகர்களை குஷிப்படுத்திய பேட்ரியாட் செகண்ட் லுக் போஸ்டர் | மோகன்லாலின் முதல் படத்தில் இணைந்து நடித்த நடிகர் காலமானார் |

தமிழில் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் எதிர்நீச்சல் தொடர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இந்த தொடரில் வரும் அனைத்து கதாபாத்திரங்களுமே தனிப்பட்ட முறையில் மக்களிடம் நன்மதிப்பை பெற்றுள்ளது. இந்நிலையில், பாம்பே ஞானம் நடித்து வந்த பட்டம்மாள் (அப்பத்தா) என்கிற முக்கிய கதாபாத்திரம் இறப்பது போல் காட்டி முடிக்கப்பட்டது.
ஏற்கனவே மாரிமுத்துவின் மறைவால் டிஆர்பியில் திண்டாடி வரும் எதிர்நீச்சல் தொடர் முற்றிலும் மாறுப்பட்ட கதைக்களத்துடன் சென்று கொண்டிருக்கிறது. புதிய வில்லன்கள் என்ட்ரி கொடுத்துள்ளனர். அந்த வரிசையில் ஜனனியின் அப்பத்தாவாக பிரபல நடிகை டி.கே.கலா என்ட்ரி கொடுக்க உள்ளதாக செய்திகள் வெளியாகி வருகிறது.
கில்லி படத்தில் பிரகாஷ்ராஜுக்கும், குருவி படத்தில் விஜய்க்கும் அம்மா கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதுதவிர வெயில் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது அவர் வில்லியாக எதிர்நீச்சல் தொடரில் நடிக்கிறார் என்பது ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.




