சிறை எனக்கு ஐந்தாம் வீடு போல ; ஜாமினில் விடுதலையான இயக்குனர் விக்ரம் பட் விளக்கம் | ‛கேஜிஎப்' இசையமைப்பாளருக்கு 35 லட்சம் மதிப்புள்ள கோல்டு வாட்ச் பரிசளித்த விஸ்வக் சென் | 'சரஸ்வதி' பட விழாவில் தெலுங்கு இயக்குனருக்கு நன்றி சொல்லி கண்ணீர் விட்ட வரலட்சுமி சரத்குமார் | தயாரிப்பாளர் சங்க தேர்தல் தொடங்கியது: இன்று மாலை ஓட்டு எண்ணிக்கை | எங்க வீட்டுப் பிள்ளை, ஆட்டோகிராப், மாமன் - ஞாயிறு திரைப்படங்கள் | கவினுக்கு ஜோடியாகும் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி | மீண்டும் இணையும் இருமுகன் கூட்டணி | மீசைய முறுக்கு 2 டீசருக்கு வரவேற்பு | அதிகரிக்கும் ரீ ரிலீஸ் படங்கள் : நல்லதா.... கட்டுப்பாடு வரணுமா...? | வரலட்சுமி இயக்கும் தெலுங்குப் படம் : 'சரஸ்வதி' டிரைலர் ரிலீஸ் |

இயக்குநர் திருச்செல்வம் நீண்ட இடைவெளிக்கு பின் 'எதிர்நீச்சல்' தொடரின் மூலம் சின்னத்திரை உலகில் அதிரடியான கம்பேக் கொடுத்துள்ளார். கதையின் நேர்த்தி, காட்சி வடிவமைப்பு, வசனம் என அனைத்திலும் டாப் மதிப்பெண்களை ஸ்கோர் செய்து வரும் 'எதிர்நீச்சல்' தொடர் இளைஞர் முதல் முதியவர் வரை ஆண் பெண் பாகுபாடில்லாமல் அனைவருக்கும் பிடித்த தொடராய் மாறியுள்ளது. அதிலும், அதகளமான எபிசோடுகளால் சமீப காலங்களில் டாப் டிஆர்பியை பிடித்து வருகிறது. இத்தகைய வெற்றியை பெற்றுள்ள இந்த தொடர் பிற மொழி சேனல்களில் ரீமேக் செய்யப்பட்டு தெலுங்கில் 'உப்பென்னா', மலையாளத்தில் 'கனல் பூவு', கன்னடத்தில் 'ஜனனி', பெங்காலியில் 'அலோர் தீக்கனா', மராத்தியில் 'சபாஷ் சன்னை' ஆகிய பெயர்களில் ஒளிபரப்பாகி வருகிறது. முன்னதாக தமிழ் தொடர்களில் 'கயல்', 'சுந்தரி' உள்ளிட்ட சில தொடர்களும் 5 மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டிருந்தாலும், எதிர்நீச்சல் தொடர் மட்டுமே 5 மொழிகளிலும் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருவது குறிப்பிடத்தக்கது.




