Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

சிவகுமாரின் திருக்குறள் 100

12 ஜன, 2023 - 10:45 IST
எழுத்தின் அளவு:
Sivakumar's-100-thirukural

பழம்பெரும் நடிகர் சிவகுமார் 100 திருக்குறள்களை தேர்ந்தெடுத்து அதற்கு ஏற்ற பொருத்தமான வாழ்க்கை அனுபவங்களை இணைத்து 'வள்ளுவர் வழியில் வாழ்ந்தவர்களின் வரலாற்றுடன் குறள்' என்கிற கண்ணோட்டத்தில் 'திருக்குறள் 100' என்ற உரை 4 மணி நேரம் நிகழ்த்தி, அதை நூலாகவும் எழுதி வெளியிட்டிருக்கிறார். சிவகுமாரின் இந்த சாதனை தொலைக்காட்சி நிகழ்ச்சியாக தயாராகி உள்ளது. இந்த நிகழ்ச்சி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வருகிற 15, 16,17 ஆகிய 3 நாட்கள் பிற்பகல் 3 மணிக்கு புதிய தலைமுறை தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.

இதுகுறித்து சிவகுமார் கூறியதாவது: 40 ஆண்டுகள் திரைப்படங்களில், நாடகங்களில், சின்னத்திரையிலும் பணியாற்றினேன். என் 64 வயதில் இனி மேக்கப் போட்டு நடிப்பதில்லை என்று முடிவெடுத்தேன். பின்னர் இலக்கியம் பக்கம் திரும்பினேன். கம்பராமாயணம் மொத்த கதையையும் 100பாடல்கள் வழியாக விளக்கிப் பேசிய முதல் மனிதர் நான்தான் என இப்போது கூறுகிறார்கள். அது மிகப்பெரும் மகிழ்ச்சி. மகாபாரதத்தை 2 மணி 10 நிமிடங்களில் விளக்கிப் பேசினேன்.

இப்போது திருக்குறளைப் பேசியிருக்கிறேன். இதில் இறங்க வேண்டாம் என்று முதலில் பயமுறுத்தினார்கள். 3 வருடம் ஆராய்ச்சி செய்து இந்த திருக்குறள் கதைகளைப் பேசியுள்ளேன். இப்போது இதன் உரிமை பெற்று புதிய தலைமுறை பொங்கல் திருநாளில் ஒளிபரப்புகிறார்கள். எல்லோரும் பார்த்து ரசியுங்கள் எனக் கேட்டுக்கொள்கிறேன். என்கிறார் சிவகுமார்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
விண்டேஜ் ஸ்டைலில் வினுஷா தேவி : வைரலாகும் க்யூட் க்ளிக்ஸ்விண்டேஜ் ஸ்டைலில் வினுஷா தேவி : ... 25 நாளில் சின்னத்திரைக்கு வந்த லத்தி 25 நாளில் சின்னத்திரைக்கு வந்த லத்தி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

Natarajan Arunachalam - TRICHY,இந்தியா
13 ஜன, 2023 - 18:15 Report Abuse
Natarajan Arunachalam எவ்வளவு நல்லவராக இருந்தாலும் குறை சொல்லும் மக்கள் இருக்கவே செய்கின்றனர். என்ன சொல்ல.
Rate this:
KayD -  ( Posted via: Dinamalar Android App )
12 ஜன, 2023 - 14:24 Report Abuse
KayD எல்லாம் ஓகே தான்... முன் கோவம் பற்றி thirukural ல நிட்சயம் irukum அத eppafi control பண்றது mu இந்த ஆன்மீக அறிவிலி கற்று கொண்டு பேசினால் better aa irukum. ஒரு விஷயத்தை மற்றவர்கள் ku sollanum னா நம்ப தான் first example aa irukanum. Pesa வந்துடான். இந்த program aa உன் குடும்பம் கூட பார்க்காது.. தனியா உட்கார்ந்து பாரு முன் கோவம் குறையும்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in