20 ஆண்டுகளுக்கு பின் தென்னிந்திய படத்தில் சஞ்சீதா ஷேக் ரீஎன்ட்ரி | மீண்டும் இணையும் ‛மை லார்ட்' கூட்டணி | புருஷன் படப்பிடிப்பு துவங்கியது | உதய்ப்பூர் புகைப்படங்களை தனித்தனியே பகிரும் விஜய் தேவரகொண்டா ராஷ்மிகா | புது முகங்களின் 'ஹைக்கூ ' | 'காந்தாரா' வழக்கு ரத்து செய்ய ரன்வீர் சிங் மனு | சென்னையில் மீண்டும் சிம்பொனி இசை நிகழ்ச்சி நடத்தும் இளையராஜா | 'கல்கி 2' படப்பிடிப்பு அப்டேட் தந்த அமிதாப் பச்சன் | பிளாஷ்பேக் : டப்பிங் கலைஞர் பாரதிராஜா | பிளாஷ்பேக் : தமிழ் படத்தை தணிக்கை செய்த ஜவஹர்லால் நேரு |

விஜய் டிவியில் கடந்த 2017ம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஐந்து சீசன்களையும் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். ஐந்தாவது சீசனுக்கு பிறகு பிக்பாஸ் அல்டிமேட் என்ற இன்னொரு நிகழ்ச்சி ஒளிபரப்பானது. கமலைத் தொடர்ந்து சிம்புவும் அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். ஆனால் அதற்கு எதிர்பார்த்தபடி வரவேற்பு கிடைக்கவில்லை. இந்த நிலையில் விரைவில் பிக்பாஸ் சீசன்-6 நிகழ்ச்சி தொடங்கப்போகிறது. இந்த நிகழ்ச்சியையும் கமல்ஹாசனே தொகுத்து வழங்கும் நிலையில் சமீபத்தில் இதற்கான முதல் புரோமோ வெளியானது.
இந்நிலையில், தற்போது பிக்பாஸ் சீசன்- 6 நிகழ்ச்சியின் இரண்டாவது புரோமோ வெளியாகி உள்ளது. அதில் கமல்ஹாசன், காட்டிலுள்ள மிருகங்களின் குணாதிசயங்கள் குறித்து பேசும் ஒரு வீடியோ வெளியாகி இருக்கிறது. இதற்கு முந்தைய சீசன்களில் அழகிய வீட்டில் உள்ள பொருட்களை வைத்து நிகழ்ச்சி குறித்து விளம்பரம் செய்து வந்த கமல்ஹாசன், இந்த ஆறாவது சீசனில் வேட்டையை ஆரம்பிக்கலாமா? என்று துவங்கியுள்ளார். மிருகங்களுடன் தெறிக்க விடும் டயலாக் பேசி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இருக்கிறார் கமல். அதோடு, காடுன்னு ஒன்னு இருந்தா ராஜா என்று ஒருத்தர்தான இருக்க முடியும் என்ற டைட்டில் உடன் இந்த இரண்டாவது புரோமோ வீடியோவை விஜய் டிவி வெளியிட்டுள்ளது.