தயாரிப்பாளர் தக்காளி சீனிவாசன் காலமானார் | போர் சூழலுக்கு மத்தியில் சென்னை திரும்பினார் நடிகர் அஜித்குமார் | பிரியா பவானி சங்கரை தொடர்ந்து ரவிதேஜா படத்தில் இணைந்த தமன்னா! | இன்வெஸ்டிகேஷன் திரில்லர் படத்தில் நடிக்கும் குமரன் | சூப்பர் நேச்சுரல் கிரைம் திரில்லராக உருவாகும் 'மண்டவெட்டி' | தனுசுக்கு ஜோடியாகும் நடிக்கும் ருக்மணி வசந்த்! | 'ஆர்யா 40' படத்தில் இரு நாயகிகள் | 'டென்ஷன்' படத்தில் காமெடி கலந்த வில்லனாக ஆர்.கே.வரதராஜ் | 'ஜெயிலர் 2' படத்தில் ஷாருக்கான் கதாபாத்திரம் என்ன தெரியுமா? | அனிமேஷன் படத்தை இயக்குகிறாரா அனில் ரவிபுடி? |

சின்னத்திரையில் வீஜேவாக என்ட்ரியான பிரஜினுக்கு உண்மையில் படங்களில் நடிப்பதில் தான் அதிக ஆர்வம் இருந்தது. சினிமாவில் சரிவர வாய்ப்புகள் கிடைக்காததால் வீஜே மற்றும் சீரியல் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டார். இடையில் சில படங்களில் நடித்திருந்தாலும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு அவை வெற்றிப்படமாக அமையவில்லை. எனவே, சீரியலில் மீண்டும் கம்பேக் கொடுத்த பிரஜின் விஜய் டிவியின் 'சின்னத்தம்பி' சீரியலின் மூலம் மீண்டும் புகழ் வெளிச்சத்தை அடைந்தர். தொடர்ந்து அன்புடன் குஷி, வைதேகி காத்திருந்தால் ஆகிய தொடர்களில் கமிட்டான பிரஜினுக்கு ஏமாற்றமே காத்திருந்தது. அந்த சீரியல்கள் அனைத்தும் விரைவிலேயே சில காரணங்களால் முடித்து வைக்கப்பட்டன. இதற்கிடையில் பிரஜினுக்கு சினிமா வாய்ப்புகள் மீண்டும் கதவை தட்ட, தற்போது அவர் கைவசம் 7 படங்கள் உள்ளன. இதன் காரணமாக தான் 'இனி சீரியலில் நடிக்க மாட்டேன் சினிமாவில் மட்டுமே கவனம் செலுத்த போகிறேன்' என சோஷியல் மீடியாவில் லைவ் வந்த பிரஜின் ரசிகர்களிடம் கூறியுள்ளார். பிரஜினின் 'டி3' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் அவரின் அடுத்தடுத்த ப்ராஜெக்ட் அப்டேட்டுகளை தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.