விடியலாக முழு வீடியோ வரும் : திரிஷாவுக்கு வாழ்த்துகள் கூறி பார்த்திபன் சஸ்பென்ஸ் | என் மீது திட்டமிட்டு தாக்குதல் : பிரியங்கா மோகன் | சம்பளத்தை குறைக்காத அஜித்: இன்னமும் சிக்காத தயாரிப்பாளர்கள் | மீடியாவை சந்தித்து பேசுகிறார் சங்கீதா? | 10 நாளில் 50 கோடி வசூலித்த ‛தாய் கிழவி' | சன்னி தியோலின் லாகூர் 1947 பட டைட்டில் மாற்றம் ? | தலைவா படத்தில் பிரச்னைக்குரிய வார்த்தைகளை சேர்த்தது யார்? : சஸ்பென்ஸ் உடைத்த இயக்குனர் விஜய் | சூர்யா தெலுங்கில் நடிக்கும் படம் பிரித்விராஜ் படத்தின் தழுவலா ? | சூரி படத்தில் காமெடியனாக நடிக்க வேண்டும் : யோகி பாபு விருப்பம் | அல்லு அர்ஜுன் படத்திற்கு அனிருத் சம்பளம் எவ்வளவு தெரியுமா... |

சின்னத்திரை ஜோடிகளிலேயே ரசிகர்களுக்கு மிகவும் பேவரைட் என்றால் அது சஞ்சீவ் - ஆல்யா மானசா ஜோடி தான். விஜய் டிவியின் ராஜா ராணி சீரியலில் ஒன்றாக இணைந்து நடித்த இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். அது முதலே கணவன் மனைவி இருவரும் ஒருவருக்கொருவர் மாறி மாறி அன்பு மழை பொழிந்து வருகிறார்கள். இந்த ஜோடியை பார்க்கும் பலரும் தாங்களும் இது போல காதலிக்க வேண்டும் என்று ஆசை கொள்ளும் அளவிற்கு அன்னியோனியமாக இருந்து வருகின்றனர்.
விஜய் டிவியின் 'ராஜா ராணி 2'-வில் நடித்து வந்த ஆல்யா பிரசவத்தின் காரணமாக சீரியலை விட்டு விலகினார். அவர் தற்போது தனது கணவர் சஞ்சீவ் நடிக்கும் 'கயல்' சீரியல் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு குழந்தை அய்லாவுடன் சென்று சர்ப்ரைஸ் விசிட் அடித்துள்ளார். அந்த புகைப்படம் இண்ஸ்டாகிராமில் வெளியாகி வைரலாகி வருகிறது.