10 நாட்களில் ரூ.25 கோடி வசூலைக் கடந்த ‛வித் லவ்' | மரகதநாணயம் 2 படம் தொடங்கியது | கில்லி மீண்டும் ரீ ரிலீஸ் ஆகிறது : மங்கத்தா சாதனையை முறியடிக்குமா? | இனி காமெடி படம் மட்டுமே...? இயக்குனர் பொன்ராம் முடிவு | சிவகார்த்திகேயனின் ‛சேயோன்' | பூவே உனக்காக படம் பிரசாந்த் நடிக்க வேண்டியதா? | இயக்குனர் விஜய்க்கு மறுவாழ்வு தருமா 'காதல்' | இப்ப வருமோ…எப்ப வருமோ….'ஜனநாயகன்' | இயக்குனர்கள் அடிமையாக இருக்கக் கூடாது : புது நிர்வாகிகள் பதவியேற்பு விழாவில் ஆர்கே செல்வமணி பேச்சு | பா.ஜ., தலைவரின் பேச்சுக்கு திரிஷா கண்டனம் : வருத்தம் தெரிவித்த நயினார் நாகேந்திரன் |

'கயல்' தொடர் சூப்பர் ஹிட் அடித்து வருகிறது. இதில், சைத்ரா ரெட்டி, சஞ்சீவ் கார்த்திக் மற்றும் முத்துராமன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இந்த தொடரில் தற்போது 'தேவி' என்ற கதாபாத்திரத்தை வைத்து தான் கதை நகர்ந்து கொண்டிருக்கிறது. தேவி கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ரவிசந்திரன் என்ற நடிகை நடித்து வருகிறார்.
ஐஸ்வர்யா, 'கயல்' சீரியலில் அமைதியாக அப்பாவியாக நடித்து வந்தாலும், ரியாலிட்டி ஷோக்களில் ஐஸ்வர்யா கலந்து கொண்டால் அந்த நிகழ்ச்சியையே கலகலப்பாகி விடுவார். கயலுக்கு அடுத்தப்படியாக இளைஞர்கள் சைட் அடிப்பது தேவியை தான். இப்போது தான் தேவிக்கு இண்ஸ்டாகிராமிலும் ரசிகர்கள் குவியத் தொடங்கியுள்ளனர். இந்நிலையில், மாடர்ன் டிரெஸ்ஸில் ஐஸ்வர்யா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமை தெறிக்கவிட்டு வருகிறது. இளைஞர்களும் ஐஸ்வர்யாவின் அழகை பார்த்து ஹார்டின்களை மலை போல் குவித்து வருகின்றனர்.




