போர் சூழலுக்கு மத்தியில் சென்னை திரும்பினார் நடிகர் அஜித்குமார் | பிரியா பவானி சங்கரை தொடர்ந்து ரவிதேஜா படத்தில் இணைந்த தமன்னா! | இன்வெஸ்டிகேஷன் திரில்லர் படத்தில் நடிக்கும் குமரன் | சூப்பர் நேச்சுரல் கிரைம் திரில்லராக உருவாகும் 'மண்டவெட்டி' | தனுசுக்கு ஜோடியாகும் நடிக்கும் ருக்மணி வசந்த்! | 'ஆர்யா 40' படத்தில் இரு நாயகிகள் | 'டென்ஷன்' படத்தில் காமெடி கலந்த வில்லனாக ஆர்.கே.வரதராஜ் | 'ஜெயிலர் 2' படத்தில் ஷாருக்கான் கதாபாத்திரம் என்ன தெரியுமா? | அனிமேஷன் படத்தை இயக்குகிறாரா அனில் ரவிபுடி? | ரஜினி, கமல் படத்தின் ரிலீஸ் தேதியை குறிவைத்த படக்குழு! |

விஜய் டிவியின் குக் வித் கோமாளி சீசன் 3 மக்களின் வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட் அடித்து வருகிறது. இதில் வரும் நட்சத்திரங்கள் அனைவருமே மிகவும் பிரபலமாகி வருகின்றனர். அந்த வகையில் அவர் தற்போது சோஷியல் மீடியாவிலும் அதிக பாலோவர்களை பெற்றிருப்பதோடு, ஆக்டிவாக தொடர்ந்து போஸ்ட்டுகளையும் பதிவிட்டு வருகின்றனர். செப் தாமு சமீபத்தில் பீஸ்ட் பட பாடலுக்கு கலக்கலாக நடனமாடி ரீல்ஸ் வீடியோ வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் துருதுருவென இருக்கும் மணிமேகலை செப் தாமுவுடன் இணைந்து வெளியிட்டிருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் இரவு 1:30 மணிக்கு ஷூட்டிங்கிற்கான செட் வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது. மணிமேகலை சோபாவில் உட்கார்ந்து பிஸ்கட் தின்று கொண்டிருக்க, அவரது தோளில் செப் தாமு படுத்து உறங்குகிறார். தூங்கிக் கொண்டிருக்கும் தாமுவின் வாயில் மணிமேகலை பிஸ்கட்டை திணிக்க, தாமு அதை தூக்கத்திலேயே தின்பது போல காமெடியாக அந்த வீடியோ எடுத்துள்ளனர். மணிமேகலை பகிர்ந்துள்ள இந்த வீடியோவை பார்த்துவிட்டு கடுப்பான நெட்டீசன்கள் 'பெருசுக்கு சேட்டைய பாத்தீயா' என கிண்டல் அடித்து வருகின்றனர்.