‛ஜமா' இயக்குனரின் அடுத்த பட தலைப்பு ‛அன்பே டயானா' | எழுத்தாளரை மணந்தார் பாடகர் வேடன் | மீண்டும் நடிக்க வரும் ரம்பா | பிரியங்கா சோப்ராவின் தி பிளப் ஓடிடியில் வெளியானது | விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகாவுக்கு திருமண வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி | மார்ச் 6ல் ‛ஓ பட்டர்பிளை' ரிலீஸ் | ஜி.வி.பிரகாஷின் புதிய படங்கள் குறித்து தகவல் இதோ | பிளாஷ்பேக்: ஒரே படக்கதை; வெற்றியை சுவைத்த எம் கே ராதா... வீழ்ச்சியைக் கண்ட எம் ஜி ஆர் | ஆர்யா படத்தில் நடிக்கமாட்டேன்: அபர்ணதி சொன்னது ஏன்? | ஓடிடியிலும் வரவேற்பு பெற்ற ஆட்டோகிராப் : சேரன் மகிழ்ச்சி |

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒரு காலத்தில் முன்னணி தொடராகவும், ரசிகர்களை கவர்ந்த தொடராகவும் வலம் வந்தது செம்பருத்தி. ஆனால், சமீப காலங்களில் அந்த தொடரின் கதைப்போக்கு சுவாரசியமாக இல்லை. ஏற்கனவே நந்தினி மற்றும் வனஜா என்ற இரண்டு வில்லி கதாபாத்திரங்கள் இந்த தொடரில் செய்யாத லீலைகள் இல்லை. தந்திரம் தொடங்கி மந்திரம் வரை அனைத்து வித்தைகளையும் இறக்கி பார்த்து விட்டனர்.
இந்நிலையில் கதையில் புது ட்ராக் கொண்டு வந்திருக்கும் படக்குழுவினர் கோலாலம்பூர் நீலாம்பரி என்ற புது டெரரான கதாபாத்திரத்தை நுழைத்துள்ளனர். இந்த கதாபாத்திரத்தில் பிரபல சீரியல் நடிகை ஷில்பா நடிக்கிறார். அவர் நடித்த காட்சியின் புரோமோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. நீலாம்பரிக்கான ஓப்பனிங் சீனிலேயே, அவர் துப்பாக்கியால் ஒருவரை சுட்டு கொன்று விடுகிறார். படையப்பா நீலாம்பரி போல கெத்தாக நுழையும் இந்த கதாபாத்திரம் சீரியலிலுக்கு எந்த வகையில் உதவும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.