பிரதீப் ரங்கநாதன் படத்தில் கதையின் நாயகியாக மமிதா பைஜூ | சமூகத்தை திருப்திப்படுத்த திருமணம் செய்ய மாட்டேன் : சிம்பு | பிச்சைக்காரன் 3 பிரமாண்டமாக உருவாகும் : விஜய் ஆண்டனி | காதலர் தினத்தில் வெளியாகும் சீதா பயணம் படத்திற்கு யு சான்றிதழ் | ரஜினி, கமல் இணையும் படம் : மகள்கள் பங்கு இருக்குமா? | உயிருள்ளவரை உஷா ரீ ரிலீஸ் : வாய்ஸ் கொடுப்பாரா சிம்பு | ரஜினிகாந்த் பாராட்டினார்: 'வித் லவ்' காவ்யா நெகிழ்ச்சி | 'ஜனநாயகன்' பிப்ரவரியில் ரிலீசா? | பிப்ரவரி 12ல் ஓடிடியில் 'தலைவர் தம்பி தலைமையில்' | 'இது ஒன்னும் தியேட்டர் கிடையாது': அறிவுரை கூறிய அஜித் |

தமிழ் சின்னத்திரையுலகில் ஒரு காலத்தில் முக்கிய நடிகையாக வலம் வந்தவர் நடிகை தேவதர்ஷினி. 'விடாது கருப்பு', 'அண்ணாமலை', 'சிதம்பர ரகசியம்', 'கோலங்கள்', 'ரமணி விசஸ் ரமணி' ஆகிய தொடர்களில் இவரது நடிப்பை பலரும் பாராட்டியுள்ளனர். இயக்குனர் நாகாவின் சூப்பர் ஹிட் காமெடி தொடரான ரமணி விசஸ் ரமணி தற்போது மூன்றாவது சீசனில் அடியெடுத்து வைத்துள்ளது.
முந்தைய இரு சீசன்களில் மிசஸ் ரமணியாக கலக்கி வந்த தேவர்தர்ஷினி மூன்றாவது சீசனில் நடிக்கவில்லை. காரணம் தி பேமிலி மேன் 2 சீரியஸில் தேவதர்ஷினியின் கதாபாத்திரம் அதிக கவனத்தை பெற்றது. அதன்பிறகு இவருக்கு பட வாய்ப்புகளும் குவிந்துள்ளதால், இனி சீரியல் வேண்டாம் என ஒதுக்கிவிட்டதாக கோலிவுட் வட்டாரத்திலிருந்து தகவல் கசிந்து வருகின்றன.
2003ம் ஆண்டு பார்த்திபன் கனவு படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான தேவதர்ஷினி தென்னிந்திய மொழிகளில் கிட்டத்தட்ட 90க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். விஜய் சேதுபதியில் 96 படத்தில் நடித்ததற்கு பிறகு வெள்ளித்திரையில் நடிப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். தற்போது சீரியலை விட சினிமா பட வாய்ப்புகள் அதிகம் வருவதால் அதில் கவனம் செலுத்துகிறார்.




