ஜனநாயகன் குறித்து மகிழ்ச்சியான செய்தி | கலாபவன் மணியின் கனவை நனவாக்கிய மகள் | பேட்ரியாட் படத்தை திரையிடுவதில் கேரள திரையரங்குகள் திடீர் போர்க்கொடி | ஆக்ஷன் மோட் ஆன் : துரந்தர் 2 டிரைலர் வெளியானது | திருமணத்திற்கு ஜோடியாக வந்ததற்கு பதிலடிதான் சங்கீதாவின் புதிய மனு ? | சிரஞ்சீவி, கமல் உள்ளிட்டோருக்கு 2025ன் தெலங்கானா மாநில சினிமா விருதுகள் அறிவிப்பு | 'மேட் இன் கொரியா' இயக்குனர் மனைவியின் கதை : பிரியங்கா மோகன் | இசையில் மட்டும்தான் கவனம்: நடிப்பு தகவலுக்கு முற்றுப்புள்ளி வைத்த சாய் அபயங்கர் | ப்ளடி பாலிட்டிக்ஸ் : கொடி கம்ப அரசியல் | சந்தானம் ஜோடியான கோபிகா ரமேஷ் |

சினிமாவில் வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரையில் நீண்ட நாட்கள் வெற்றிகரமான நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் விஜயகுமார். இவர் நடித்த 'நாட்டாமை' கதாபாத்திரத்தையும், கம்பீரமான குரலையும் யாரும் மறக்க முடியாது. தங்கம் சீரியலின் மூலம் சின்னத்திரைக்கு எண்ட்ரி கொடுத்த விஜயகுமார் தொடர்ந்து வம்சம், நந்தினி, ராசாத்தி உள்ளிட்ட தொடர்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். அதன்பிறகு பெரிதாக திரையில் தோன்றாத விஜயகுமார் மூன்று ஆண்டுகள் கழித்து மீண்டும் நடிக்க வந்துள்ளார்.
ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வரும் ஒரு ஊர்ல ஒரு ராஜ குமாரி இரண்டாவது சீசனில் மீண்டும் நாட்டாமை கெட்டப்பில் விஜயகுமார் என்ட்ரி கொடுக்கிறார். பார்ப்பதற்கு செம கெத்தாக இருக்கும் நம்ம நாட்டாமை யாருக்கு என்ன தீர்ப்பு வழங்கப் போகிறார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.




