தயாரிப்பு நிறுவனம் துவங்கும் ரியோ ராஜ் | பிரீயட், பேண்டஸி படமாக 'தனுஷ் 56' : மாரி செல்வராஜ் தகவல் | எஜமான் பட காட்சியை போன்றே விஜய்க்கு வைத்தேன் : பரதன் | மீண்டும் கியாரா அத்வானியை இயக்குகிறாரா கீது மோகன்தாஸ்? | தமிழக அரசு திரைப்பட விருது பெற்ற சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன், ஏஆர் ரஹ்மான், கீர்த்தி சுரேஷ் | சினிமாவை போன்று விளம்பரங்களிலும் சம்பாதிக்கும் தமன்னா | நானியின் ‛தி பாரடைஸ்' படத்தின் ரிலீஸ் தேதி திடீர் மாற்றம் | சிக்கிரி சிக்கிரி பாடலுக்கு சொந்தமாக நடன அசைவை வெளிப்படுத்திய ராம்சரண் | துல்கர் சல்மானின் 41வது படத்தில் இணைந்த ஜெகபதிபாபு | மூத்த மகனும் டைரக்ஷனில் இறங்குகிறார் ; பிரித்விராஜின் அம்மா தகவல் |

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த தொடர்களில் ஒன்று 'நீதானே எந்தன் பொன் வசந்தம்'. ஜெய் ஆகாஷ், தர்ஷனா அசோகன், சோனியா, சத்ய ப்ரியா உள்ளிட்டோர் இந்த தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தனர். ஆரம்பத்தில் சுவாரசியமான திரைக்கதையுடன் நகர்ந்து கொண்டிருந்த இந்த தொடர் சமீபகாலங்களில் சறுக்கல்களை சந்தித்து வந்தது. இந்நிலையில் இந்த தொடர் 509-வது எபிசோடுடன் முடிவுக்கு வந்தது.
நாயகனுக்கும் நாயகிக்கும் கண்டம் இருப்பது போலவும், 7 வில்லிகள் 7 தீய சக்திகள், அம்மன், அமானுஷ்யம் என கான்செப்டுகளை வைத்து திரைக்கதை அமைத்து எபிசோடுகளை ஒளிபரப்பி வந்தனர். இப்போது எல்லாம் சரியாகி எபிசோடில் சுபம் என போட்டு இந்த தொடரை முடித்து வைத்துள்ளனர்.