
பாரதி கண்ணம்மாவில் வில்லிக்கு பதில் வில்லன் - கை கொடுக்குமா புதிய டுவிஸ்ட்
சிறைக்கு செல்லும் வெண்பா அங்கே இருக்கும் மாயாண்டியை சந்தித்து கண்ணம்மாவை பழிவாங்க கூட்டு சேர்கிறார். இதற்கிடையில் சிறையிலிருந்து வெளிவரும் மாயாண்டி வெண்பாவின் வேலைக்காரி சாந்தியை சந்தித்து கண்ணம்மாவை பழிவாங்க திட்டம் தீட்டுகிறார். இதனால் கதைக்களம் மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
ஆனால், ஒருபுறம் பாரதி கண்ணம்மாவின் ஹீரோயின் ரோஷினி சீரியலை விட்டு விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மற்றொரு புறம் முக்கிய நடிகையான வெண்பா கர்ப்பமாக இருக்கும் காரணத்தால் சீரியலை விட்டு விலக வேண்டிய கட்டாயத்தில் அவர் சிறைக்கு சென்றுவிட்டதாக காட்சியமைக்கப்படுள்ளது. நிலவரம் இப்படி இருக்க வில்லனாக என்ட்ரி கொடுக்கும் மாயாண்டி கதாபாத்திரம் பாரதி கண்ணம்மாவின் டிஆர்பிக்கு கை கொடுக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!