முன்னணி நடிகர்களின் படங்களுக்கு நீண்ட காத்திருப்பு | 100 கோடி கிளப்பில் ‛பராசக்தி' : சிவகார்த்திகேயனுக்கு 5வது படம் | இப்பவும் கதை கேட்கும்போது துாங்குறீங்களா? : அஸ்வின் சொன்ன பதில் | விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா திருமண ஏற்படுகள் தீவிரம் | தெலங்கானா : டிக்கெட் கட்டண உயர்வுக்கு 90 நாள் விதி | 'இளையராஜா' பயோபிக் இந்த வருடமாவது ஆரம்பமாகுமா ? | 'ஜனநாயகன்' வழக்கு விவகாரம் : அடுத்து என்ன நடக்கலாம்? | மீண்டும் வருகிறோம்- மங்காத்தா படப்பிடிப்பு புகைப்படங்களை வெளியிட்ட வெங்கட் பிரபு! | ஜனவரி 23ல் ஓடிடியில் வெளியாகும் தனுஷின் தேரே இஸ்க் மெய்ன்! | விஜய் ஆண்டனி, ஜிவி பிரகாஷ்குமார் வரிசையில் கங்கை அமரன், தேவிஸ்ரீ பிரசாத் |

விஜய் டிவி ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்ட ஆல்யா மானசாவை மாகாபா கலாயத்து தள்ளும் ப்ரோமோ வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
விஜய் டிவியின் ரியாலிட்டி ஷோக்களில் ஒன்றான ஸ்டார்ட் மியூசிக் நிகழ்ச்சியை வீஜே மாகாபா ஆனந்த் தொகுத்து வழங்கி வருகிறார். தற்போது இந்த நிகழ்ச்சியில் ராஜா ராணி 2 தொடரின் நடிகர்கள் இரு அணிகளாக பிரிக்கப்பட்டு விளையாடி வருகின்றனர். சித்து, ஆல்யா, வைஷ்ணவி ஒரு அணியாகவும் வீஜே அர்ச்சனா, பிரதோஷ், பாலாஜி மற்றொரு அணியாகவும் விளையாடி வருகின்றனர். இந்நிகழ்ச்சியில் ராஜா ராணி 2 சீரியலை செமயாக கலாய்த்து தள்ளும் மாகாபா சீரியலின் பெயரை மாமியார் மருமகள் என்று வைத்திருக்க வேண்டும் என கமெண்ட் அடிக்கிறார்.
தொடர்ந்து நிகழ்ச்சியின் ஒரு டாஸ்கான சவுண்ட் பார்ட்டி சுற்றில் பாடலின் ராகத்தை வைத்து வரிகளை கண்டுபிடிக்க வேண்டும் என தரப்படுகிறது. அப்போது ஆல்யா காதலன் படத்தின் பேட்ட ரேப் பாடலை வாய்க்கு வந்தபடி உளறி குரோம்பேட்டையை ரோம்பேட்டை என்று பாடுகிறார். இதனால் ஆல்யாவை மாகாபா அவர் ஸ்டைலில் வச்சு செய்கிறார். பார்ப்பதற்கு செம காமெடியாக இருக்கும் இந்த ப்ரோமோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஸ்டார்ட் மியூசிக் நிகழ்ச்சி ஞாயிறுதோறும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.




