
விஷால் நல்லா இருக்கனும் : மிஷ்கின்
இந்தநிலையில் ஏற்கனவே தான் இயக்கிய பிசாசு படத்தின் இரண்டாம் பாகத்தை ஆண்ட்ரியா, விஜய் சேதுபதி, பூர்ணா ஆகியோரை வைத்து இயக்கி வரும் மிஷ்கின் தான் அளித்த ஒரு பேட்டியில் விஷால் குறித்து கூறியுள்ளார். அதில், விஷால் எனது தம்பி மாதிரி என்று உருகியுள்ளார். மேலும், துப்பறிவாளன் படத்திற்கு பாட்டே வேண்டாம் என்று நான் சொன்னபோது என்னை புரிந்து கொண்டு அதற்கு சம்மதம் சொன்ன மனிதன் விஷால். நல்ல உழைப்பாளியான விஷால் இன்னும் 40 வருசம் சினிமாவில் இருப்பான். நான் அவன் மேல் வைத்த அன்பையும், என்மேல் அவன் வைத்த அன்மையும் மறக்க முடியாது. என்றாலும் நாங்கள் இருவருமே விடாகொண்டன் கொடாக்கொண்டனாக இருப்பதால்தான் எங்களது கூட்டணி முறிந்து விட்டது. இனிமேல் நாங்கள் இணையமாட்டோம். ஆனபோதும் விஷால் நன்றாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார் மிஷ்கின்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!