'காந்தி டாக்ஸ்' முதல் 'வித் லவ்' வரை... இந்த வார ஓடிடி வெளியீடுகள்.. | வருங்கால கணவருக்கு என்னென்ன தகுதிகள் இருக்க வேண்டும்! மீனாட்சி சவுத்ரி வெளியிட்ட தகவல் | வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி: 'துரந்தர்- 2' படத்தின் டிரைலர் நாளை வெளியாகிறது | ஜான்வி கபூரின் பிறந்தநாளில் வெளியிடப்பட்ட பெத்தி பட போஸ்டர்! | யோகி பாபுவின் 'கெணத்த காணோம்' படத்தின் டிரைலர் வெளியானது! | ரஜினி, கமல் இணையும் படம்: லதா ரஜினிகாந்த் சொன்ன தகவல் | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் 'கார்மேனி செல்வம்' புதிய ரிலீஸ் தேதி | மீண்டும் சிரஞ்சீவி படத்திற்கு இசையமைக்கும் தமன்! | என் போட்டோவை மார்பிங் செய்கின்றனர்!: ரச்சிதா ஆதங்கம் | ரொமான்டிக் திரில்லர் கதையில் உருவாகும் 'ஆசை' |

சீனு ராமசாமி இயக்கத்தில் என்ஆர் ரகுநந்தன் இசையமைப்பில், ஜிவி பிரகாஷ்குமார், காயத்ரி மற்றும் பலர் நடிக்கும் 'இடி முழக்கம்' படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆகஸ்ட் மாதம் 2ம் தேதி ஆரம்பமானது. தேனி மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் பெரும்பாலான படப்பிடிப்பு நடைபெற்றது. படத்திற்கு 'இடி முழக்கம்' என்ற பெயரை ஆகஸ்ட் 11ம் தேதியன்று அறிவித்தார்கள்.
குறுகிய காலத்தில் படப்பிடிப்பை நடத்தி நேற்றுடன் முடித்துள்ளார்கள். அது பற்றி படத்தின் நாயகன் ஜிவி பிரகாஷ்குமார், “இடிமுழக்கம்' படப்பிடிப்பு இனிதே நிறைவு பெற்றது.திருவிழா முடிந்து பள்ளிக்கு செல்லப் போகும் மாணவனை போல சென்னை வருகிறேன். இந்த அழகான நாட்களை நினைவுகளாக எனக்கு தந்த சீனு ராமசாமி சாருக்கு நன்றி,” என டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
அதற்கு சீனு ராமசாமி, “ஆணவம் இல்லாத அறிவு
“தாய்மொழிப் பற்று
தன்னை ஒப்புவித்து
ஒத்துழைத்த கலை எளிமை
இசையோடு கூடிய
தமிழறிவு
என் கலை மீதான
அன்பு
இவையெல்லாம் உங்கள்
பக்கம் எனை ஈர்த்தது
"வெற்றித்தமிழன்"
என்றே உங்களை
அழைக்க விழைகிறேன்
துணை வரட்டும்
என் தாய் மீனாட்சி
வாழ்த்துகள் தம்பி” என பதிலளித்துள்ளார்.
முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய ஜான் பென்னி குவிக்கிற்கு மலர் மாலை மரியாதை செய்து இடிமுழக்கம் குழுவினர் தங்களது படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளனர்.




