10 நாட்களில் ரூ.25 கோடி வசூலைக் கடந்த ‛வித் லவ்' | மரகதநாணயம் 2 படம் தொடங்கியது | கில்லி மீண்டும் ரீ ரிலீஸ் ஆகிறது : மங்கத்தா சாதனையை முறியடிக்குமா? | இனி காமெடி படம் மட்டுமே...? இயக்குனர் பொன்ராம் முடிவு | சிவகார்த்திகேயனின் ‛சேயோன்' | பூவே உனக்காக படம் பிரசாந்த் நடிக்க வேண்டியதா? | இயக்குனர் விஜய்க்கு மறுவாழ்வு தருமா 'காதல்' | இப்ப வருமோ…எப்ப வருமோ….'ஜனநாயகன்' | இயக்குனர்கள் அடிமையாக இருக்கக் கூடாது : புது நிர்வாகிகள் பதவியேற்பு விழாவில் ஆர்கே செல்வமணி பேச்சு | பா.ஜ., தலைவரின் பேச்சுக்கு திரிஷா கண்டனம் : வருத்தம் தெரிவித்த நயினார் நாகேந்திரன் |

ஆடிசம் என்பது பிறப்பிலிருந்தே வரும் ஒரு குறைவாடு புற உலகச் சிந்தனைக் குறைபாடு என்பார்கள். அதாவது தங்களை சுற்றி என்ன நடக்கிறது என்பதை பற்றி தெரியாமல் தனக்கு என்ன தோன்றுகிறதோ அதனை செய்வார்கள். அபூர்வமாக சிலருக்கு இந்த நோய் திடீர் அதிர்ச்சியாலும் ஏற்படலாம். குறிப்பாக விபத்து, மிகவும் நெருக்கமானவர்களின் மரணம் போன்றவற்றால் கூட ஏற்படலாம்.
இப்படியான ஆடிசம் பாதித்த பெண்ணின் வாழ்க்கையை மையமாக கொண்டு தமிழில் ஒரு படம் தயாராகிறது. ஐஸ்வர்யா ராஜேஷ் ஆடிசம் பாதித்த பெண்ணாக நடிக்கிறார். அவரது பின்னணி பற்றி அறிய நியமிக்கப்படும் விசாரணை அதிகாரியாக அர்ஜுன் நடிக்கிறார்.
தினேஷ் லக்ஷ்மணன் எழுதி இயக்கும் இந்தப் படத்தை, ஜி அருள் குமார் தயாரிக்கிறார். சரவணன் அபிமன்யு ஒளிப்பதிவு செய்கிறார் பரத் ஆசீவகன் இசை அமைக்கிறார், பிரவீன் ராஜா, பிராங்க்ஸ்டர் ராகுல், அபிராமி வெங்கடாசலம் மற்றும் பலர் நடிக்கின்றனர்.
படம் பற்றி தயாரிப்பாளர் ஜி.அருள் குமார் கூறியதாவது: இது ஒரு க்ரைம் -த்ரில்லர் இன்வெஸ்டிகேஷன் கதை, ஆக்ஷன் கிங் அர்ஜுன் இப்படத்தில் விசாரணை அதிகாரியாக நடிக்கிறார். இது மன இறுக்கம் கொண்ட ஆடிசம் பாதித்த குழந்தைகளின் பின்னணியில் ஒரு பெண் கதாப்பாத்திரத்தை மையமாக கொண்ட திரைப்படம். இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை பெண் கதாபாத்திரத்தில் நடிக்கிறார், அவரது கதாபாத்திரத்திம் படத்தில் மிகவும் முக்கியத்துவம் மிகுந்த கதாப்பாத்திரமாகும்.
இயக்குனர் தினேஷ் லக்ஷ்மணன் திரைக்கதையை முதன்முதலில் விவரித்தபோது, நான் பார்வையாளராக மிகவும் ரசித்தேன். திரையரங்குகளில் இப்படத்தை பார்க்கும் பார்வையாளர்களுக்கு, நீண்ட காலத்திற்குப் பிறகு க்ரைம்-த்ரில்லர் இன்வெஸ்டிகேஷன் வகைகளில் ஒரு புதிய அனுபவத்தை தரும். நடிகர் அர்ஜுன் இந்த வகையைச் சேர்ந்த திரைப்படங்களில் அதிகம் நடித்திருந்தாலும், இப்படம் அதிலிருந்து மாறுபட்டு, தனித்துவமாகவும் வித்தியாசமாகவும் இருக்கும். என்றார்.




