
தனுஷின் தெலுங்கு படம் பின்னணியில் சாய்பல்லவி
இதில் சேகர் கம்முலா தற்போது நாகசைதன்யா மற்றும் சாய்பல்லவி இணைந்து நடித்துள்ள லவ் ஸ்டோரி என்கிற படத்தை இயக்கியுள்ளார். விரைவில் இந்த படம் ரிலீசாக இருக்கிறது. இந்த நிலையில் சேகர் கம்முலா மற்றும் தனுஷ் என்கிற யூகிக்க முடியாத கூட்டணி அமைவதற்கு பின்னணியில் காரணமாக இருந்தவர் சாய்பல்லவி தான் என்கிற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
சேகர் கம்முலா இயக்கத்தில் லவ் ஸ்டோரி படத்தில் நடித்து வந்தபோது அவரது திறமையை பார்த்து வியந்த சாய் பல்லவி, தனுஷுடன் தனக்கு உள்ள நெருங்கிய நட்பின் அடிப்படையில் சேகர் கம்முலா பற்றி கூறி சிபாரிசு செய்தாராம். அதைத்தொடர்ந்து சேகர் கம்முலாவுடன் சந்திப்பு நிகழ்த்திய தனுஷ், அவர் சொன்ன கதையிலும் இம்ப்ரஸ் ஆகி உடனே நடிக்க ஒப்புக்கொண்டாராம்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!