
சைக்கிள்ல கூட்டிட்டு போ கபிலா : ஹர்பஜன் சிங் வேண்டுகோள்
அந்தப் படத்தில் மற்ற காட்சிகளை விடவும் இந்த சைக்கிள் காட்சி மீம்ஸ்களால் மிகவும் பிரபலம் அடைந்தது. அந்த அளவிற்கு மக்கள் மனதில் பதிந்த ஒரு காட்சியாகிப் போனது. இன்னமும் கூட அந்த மீம்ஸ்களை மீம்ஸ் கிரியேட்டர்கள் நிறுத்தவில்லை.
இதனிடையே, கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், லாஸ்லியா, அர்ஜுன் மற்றும் பலர் நடித்துள்ள "பிரண்ட்ஷிப்" படத்தின் டிரைலரை சற்று முன் ஆர்யா வெளியிட்டார். அதற்கு நன்றி தெரிவித்த ஹர்பஜன், “கபிலா, என்ன ஒரு ரவுண்ட் அந்த சைக்கிள்ல கூட்டிட்டு போ பா,” என கேட்டுக் கொண்டுள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஐபிஎல் போட்டிகளில் விளையாட வந்த போது தமிழில் பல சுவாரசியமான டுவீட்களை செய்து பரபரப்பை ஏற்படுத்தியவர் ஹர்பஜன் சிங். இப்போது அவர் நாயகனாக அறிமுகமாகும் படத்திற்காக மீண்டும் தமிழ் டுவீட்டுகளில் இறங்கியுள்ளார்.
ஹர்பஜன் சிங் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள "டிக்கிலோனா" படம் இந்த வாரம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!