காமெடி முதல் கிரைம் த்ரில்லர் வரை : இந்த வார ஓடிடி ரிலீஸ்......! | வாரணாசி-க்கு பின்னணி இசை அமைப்பது எப்போது... : கீரவாணி கொடுத்த அப்டேட் | 'சர்வம் மாயா' நாயகிக்கு பாராட்டுடன் பரிசும் அனுப்பிய சூர்யா ஜோதிகா | நன்றி சொன்னார் எஸ்.பி.முத்துராமன் : கண்கலங்கினார் வி.சி.குகநாதன் | ஹனிரோஸுக்கு ஜிஎஸ்டி துறை அனுப்பிய நோட்டீசை தள்ளுபடி செய்த கேரள உயர்நீதிமன்றம் | நடிகர் ஜெயசூர்யாவின் 39 லட்சம் மதிப்புள்ள சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை | கேரளா பிளஸ் 2 மாதிரி தேர்வில் மோகன்லாலின் சினிமா பயணம் குறித்து கேள்வி | அஞ்சு ரூபாய் டாக்டர் போன்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் மம்முட்டி | 'வேள்பாரி' வேலைகளில் தீவிரம் காட்டும் ஷங்கர் | பெரும் வரவேற்பைப் பெற்ற 'நாகபந்தம்' டீசர் |

தமிழ்த் திரையுலகத்தின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் யுவன் ஷங்கர் ராஜா. அவரது இசையில் வெளிவந்த கார்த்தி நடித்த படங்களான 'பருத்தி வீரன், பையா, நான் மகான் அல்ல' ஆகிய படங்களின் பாடல்கள் சூப்பர் ஹிட்டாக அமைந்தன.
கார்த்தி அறிமுகமான 'பருத்தி வீரன்' படத்தில் யுவனின் பின்னணி இசையும், பாடல்களும் படத்தில் பெரிதும் பேசப்பட்டன. கார்த்தி, யுவன் கூட்டணி கடைசியாக 2013ல் வெளிவந்த 'பிரியாணி' படத்தில் இடம் பெற்றது.
இந்த வருடம் கார்த்தி நடித்து வெளிவந்த 'சுல்தான்' படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா தான் பின்னணி இசை அமைத்துக் கொடுத்தார். அப்படத்தின் பாடல்களுக்கு விவேக் மெர்வின் இசையமைத்திருந்தார்கள். இருந்தாலும் ஒரு படத்தின் இசை பற்றி குறிப்பிடும் போது பாடல்களுக்கு இசையமைத்தவர் தான் இசையமைப்பாளர் எனக் குறிப்பிடப்படுகிறார்.
அந்த விதத்தில் எட்டு வருடங்கள் கழித்து மீண்டும் இன்று ஆரம்பமான 'விருமன்' படத்தில் கார்த்தி, யுவன் கூட்டணி மீண்டும் முழுமையாக இணைகிறது. இப்படத்தை இயக்கும் முத்தையாவுடன் முதல் முறையாக இணைகிறார் யுவன்.




