Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'துப்பறிவாளன் 2', கிடப்பில் போட்ட விஷால்

01 செப், 2021 - 16:36 IST
எழுத்தின் அளவு:
Vishal-holds-Thupparivaalan-2

நடிகர் விஷால் அவரது சொந்த படத் தயாரிப்பு நிறுவனம் சார்பில் மிஷ்கின் இயக்கத்தில், இளையராஜா இசையமைப்பில், தயாரித்து நடிக்க ஆரம்பித்த படம் 'துப்பறிவாளன் 2'. இப்படத்தின் படப்பிடிப்பு இங்கிலாந்தில் 2019ம் ஆண்டு ஆரம்பமாகி ஒரு கட்டப் படப்பிடிப்பு நடந்தது. படத்திற்கு மிஷ்கின் அதிக பட்ஜெட் இழுப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதன்பின் அப்படத்திலிருந்து விலகினார் மிஷ்கின். விஷால் தானே படத்தை இயக்கப் போவதாக அறிவித்தார். ஆனால், அதன்பின் படத்தின் படப்பிடிப்பு மீண்டும் நடக்கவில்லை.

அதற்குப் பிறகு அவர் நடித்த 'ஆக்ஷன், சக்ரா' ஆகிய படங்கள் வெளிவந்துவிட்டன. 'எனிமி' என்ற படத்தில் விஷால் நடித்து முடித்துவிட்டார். அடுத்து 'வீரமே வாகை சூடும்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இவற்றோடு தனது 32வது படத்தில் இன்று நடிக்க ஆரம்பித்துவிட்டார் விஷால். 'துப்பறிவாளன் 2' படம் மேற்கொண்டு நடக்குமா நடக்காதா என்பது குறித்து அவர் எதுவும் பேசுவதில்லை.

'துப்பறிவாளன்' படத்தின் முதல் பாகம் 2017ம் ஆண்டு வெளிவந்து நல்ல வரவேற்பைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே, 'துப்பறிவாளன் 2' படத்தை விட்டு விலகிய பிறகு தான் ஆரம்பித்த, 'பிசாசு 2' படத்தின் படப்பிடிப்பை இயக்குனர் மிஷ்கின் இன்று முடித்துவிட்டார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
உலக புகழின் மகன், உலக அழகியின் கணவன்: அபிஷேக் பச்சனை புகழ்ந்து தள்ளும் பார்த்திபன்உலக புகழின் மகன், உலக அழகியின் கணவன்: ... சர்வர் சுந்தரம் - சந்தானம் தந்த புதுத் தகவல் சர்வர் சுந்தரம் - சந்தானம் தந்த ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in