சிக்மா பாடல் டான்ஸ் : நடிக்க ஆசைப்படுகிறாரா ஜேசன் சஞ்சய் | சாய் அபயங்கரின் 3வது 200 மில்லியன் ஆல்பம் | பிகினி தோற்றம் : கிரித்தி சனோன் வெளியிட்ட தகவல் | ராம்சரண் மனைவியிடம் இருந்து திரிஷாவுக்கு பறந்து வந்த பரிசுப் பெட்டகம் | ஜனநாயகன் லீக் விவகாரம் : மேலும் ஒருவர் கைது | 'மாம் 2' படப்பிடிப்பில் குஷி கபூரின் நடிப்பால் அதிருப்தியில் படக்குழுவினர் | அம்மா இறந்த ஒரு வாரத்திற்குள் ரேஸிங்கில் இறங்கிய அஜித் குமார் | ஒருவர் சம்பாதித்தால் போதும் ; மகனின் மனோபாவம் குறித்து மோகன்லால் பெருமிதம் | 'திரிஷ்யம்' நடிகையின் புகாரை விசாரிக்க ஐவர் குழு அமைத்த ஸ்வேதா மேனன் | சத்ரபதி சிவாஜி டீசர்ட் அணிந்து நடனமாடியதற்கு மன்னிப்பு கேட்ட ஜெனிலியாவின் கணவர் |

புரியாத புதிர், ஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் மற்றும் விரைவில் வெளியீட்டிற்குக் காத்திருக்கும் 'யாருக்கும் அஞ்சேல்' ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் தயாராகும் புதிய திரைப்படம் மைக்கேல். நடிகர் சந்தீப் கிஷன் கதையின் நாயகனாக நடிக்கிறார். ஆக்சன் என்டர்டெய்னர் படமாக உருவாகும் இந்தப் படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார்.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் தயாராகும் இந்த திரைப்படம் பான் இந்திய திரைப்படமாக உருவாகிறது. இதில் பணியாற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் நடிகர், நடிகைகள் பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்
விஜய் சேதுபதி - சந்தீப் கிஷன் இருவரும் முதன் முறையாக மைக்கேல் படத்தில் இணைந்திருப்பதால், இப்படத்தின் அறிவிப்பு வெளியானவுடனே ரசிகர்களிடத்தில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.




