இந்த வார ஓடிடியில் வரிசைக்கட்டும் க்ரைம் த்ரில்லர் படங்கள்....! | நானி படத்தில் இணைந்த பிரித்விராஜ் | ஐஸ்வர்யா ரஜினி இயக்கும் ‛டெக்ஸ்லா' : யுவன் இசை | நடிகையுடன் உறவு: விவாகரத்து கேட்டு நடிகர் விஜய் மனைவி சங்கீதா மனு | மோடி, அமித்ஷாவிடம் வாழ்த்து பெற்ற விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா | சினிமாவில் அரசியல் பேசுவது தவறில்லை: சிவகார்த்திகேயன் | மலையாள இயக்குனர் டைரக்ஷனில் நடிக்கும் விக்ரம் | தேர்தல் நெருங்கும் வேளையில் முதல்வரை நேர்காணல் செய்த மோகன்லால் | ரசிகர்களை குஷிப்படுத்திய பேட்ரியாட் செகண்ட் லுக் போஸ்டர் | மோகன்லாலின் முதல் படத்தில் இணைந்து நடித்த நடிகர் காலமானார் |

1992ல் பரதன் இயக்கத்தில் சிவாஜி, கமல், ரேவதி, கவுதமி, நாசர், வடிவேலு நடிப்பில் உருவான படம் தேவர் மகன். இளையராஜா இசையமைத்த இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரிக்கப்போவதாக சட்டசபை தேர்தலுக்கு முன்பே கூறி வந்தார் கமல். பின்னர் அந்த படத்தின் தலைப்பு மாற்றப்போவதாக கூறப்பட்டது. இந்நிலையில் கமல் அளித்த ஒரு பேட்டியில், தேவர்மகன் 2 உருவாக இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.
முதல் பாகத்தை மலையாள இயக்குனர் பரதன் இயக்கிய நிலையில், இரண்டாவது பாகத்தையும் மலையாளப்பட இயக்குனர் மகேஷ் நாராயணன் இயக்குவதாக கூறப்படுகிறது. இவர் மலையாளத்தில் பகத்பாசில் நடித்த மாலிக் என்ற படத்தை இயக்கியவர். அதோடு கமலின் விஸ்வரூபம்-2 படத்தின் எடிட்டராகவும் பணியாற்றியவர். தேவர் மகன் 2 படத்தை கமல் திரைக்கதை எழுதி தயாரிக்க, விக்ரம், விஜய் சேதுபதி இருவரும் நடிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.




