சாய் அபயங்கர், கயாடு லோகர் புதிய ஜோடி | சிவகார்த்திகேயனின் ‛சேயோன்' பட தலைப்புக்கு சிக்கல் | போலீஸ் அதிகாரியாக சசிகுமார் | இரண்டாவது திருமணம் குறித்த சலசலப்புக்கு மீனா பதில் | ஹாக்டெய்ல் 2வில் லெஸ்பியன் வேடத்தில் நடிக்கும் ராஷ்மிகா | அனில் ரவிபுடி இயக்கத்தில் கார்த்தி, பஹத் பாசில் நடிக்கிறார்களா? | அரசன் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கியது | சிறந்த நாள் : திருப்பதியில் சாமி தரிசனம் செய்த திரிஷா நெகிழ்ச்சி | ஜிவி பிரகாஷ் படங்களில் அறிமுகமான மமிதா பைஜு, அனஸ்வரா ராஜன் | ரத்தம் தெறிக்கும் வன்முறை படமாக ‛டாக்சிக்' : டீசர் வெளியானது |

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலைக்குப் பின்பு, இன்று முதல் தியேட்டர்கள் திறக்கப்பட்டுவிட்டன. மக்களை மீண்டும் தியேட்டர்கள் பக்கம் வரவழைக்க பெரிய நடிகர்களின் படங்கள் வந்தாக வேண்டும். தமிழ் சினிமாவில் தற்போது உருவாகி வரும் பெரிய படங்களில் ஒன்றான ரஜினிகாந்த் நடித்துள்ள 'அண்ணாத்த' படத்தை தீபாவளி வெளியீடாக நவம்பர் 11ம் தேதிதான் வெளியிட உள்ளார்கள். அதற்கான அறிவிப்பையும் எப்போதோ வெளியிட்டு விட்டார்கள்.
அதற்கடுத்து பெரிய படம் என்றால் 'வலிமை' மட்டும்தான். இப்படத்திற்கான ஒரு வாரப் படப்பிடிப்பு மட்டுமே பாக்கியுள்ளதாக கடந்த சில மாதங்களாகவே சொல்லி வருகிறார்கள். மற்ற படப்பிடிப்பு வேலைகள் முடிவடைந்துவிட்டது. படத்திற்கான இறுதிக் கட்டப் பணிகளும் ஏற்கெனவே நடந்து வருகிறது.
விசேஷ நாட்களில், விடுமுறை நாட்களில்தான் பெரிய படங்கள் வெளியாகும். அந்த விதத்தில் ஆயுத பூஜை, விஜயதசமி விடுமுறை நாட்கள் அக்டோபர் மாதம் 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் வருகிறது. அதற்கடுத்த இரண்டு நாட்களும் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமை என்பதால் அந்த சமயம் 'வலிமை' படத்தை வெளியிட சரியான தினம் என தியேட்டர்காரர்கள் கருதுகிறார்கள்.
இன்னும் சுமார் 50 நாட்கள் இருக்கிறது. அதற்குள் படத்தின் எஞ்சிய வேலைகளை முடித்து, படத்தின் வியாபாரத்தையும் முடிக்கவும் முடியும் என்கிறார்கள்.
படத்தைத் தியேட்டர்களில் மட்டும்தான் வெளியிட வேண்டும் என்பதுதான் அஜித்தின் கண்டிஷன் என்பது நமக்குக் கிடைத்த தகவல். எனவே, தியேட்டர்காரர்களின் எதிர்பார்ப்பின் படி அக்டோபர் 14 படத்தை வெளியிட அஜித் முடிவு செய்தால் அக்டோபர் மாதம் அஜித்தின் வலிமையான கொண்டாட்டமாக அமைந்துவிடும்.




