‛ஜமா' இயக்குனரின் அடுத்த பட தலைப்பு ‛அன்பே டயானா' | எழுத்தாளரை மணந்தார் பாடகர் வேடன் | மீண்டும் நடிக்க வரும் ரம்பா | பிரியங்கா சோப்ராவின் தி பிளப் ஓடிடியில் வெளியானது | விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகாவுக்கு திருமண வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி | மார்ச் 6ல் ‛ஓ பட்டர்பிளை' ரிலீஸ் | ஜி.வி.பிரகாஷின் புதிய படங்கள் குறித்து தகவல் இதோ | பிளாஷ்பேக்: ஒரே படக்கதை; வெற்றியை சுவைத்த எம் கே ராதா... வீழ்ச்சியைக் கண்ட எம் ஜி ஆர் | ஆர்யா படத்தில் நடிக்கமாட்டேன்: அபர்ணதி சொன்னது ஏன்? | ஓடிடியிலும் வரவேற்பு பெற்ற ஆட்டோகிராப் : சேரன் மகிழ்ச்சி |

ஜுனியர் என்டிஆர், ராம் சரண், ஆலியா பட், ஒலிவியா மோரிஸ், அஜய் தேவகன் மற்றும் பலர் நடிக்கும் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் படப்பிடிப்பு உக்ரைன் நாட்டில் நிறைவடைந்துள்ளது. இத்துடன் படப்பிடிப்பு முழுமையாக முடிந்துவிட்டது. 'பேட்ச் ஒர்க்' எனப்படும் ஒரு சில விடுபட்ட காட்சிகளின் படப்பிடிப்பு மட்டும் ஐதராபாத்தில் நடைபெற உள்ளது.
இந்த மாதத் துவக்கத்தில் ஜுனியர் என்டிஆர், ராம் சரண், இயக்குனர் ராஜமௌலி உள்ளிட்ட படக்குழுவினர் ஐதராபாத்திலிருந்து உக்ரைன் நாட்டிற்கு புறப்பட்டு சென்றனர். அங்கு 15 நாட்களுக்கும் மேலாக படப்பிடிப்பு நடைபெற்றது. ஒரு சில காட்சிகள், பாடல் காட்சி ஆகியவை அங்கு படமாக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. படக்குழுவினர் ஐதராபாத் திரும்பியதும் பத்திரிகையாளர்களை சந்திக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
படத்தின் வெளியீடு அக்டோபர் 13 என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், புதிய வெளியீட்டைத் தேதியை பத்திரிகையாளர் சந்திப்பின் போது அறிவிக்கலாம் என்கிறார்கள்.