
ஹன்சிகாவை தொடர்ந்து மாலத்தீவுக்கு சென்ற ஆண்ட்ரியா
பாலிவுட் நடிகை ஆலியா பட் தனது காதலன் ரன்பீர் கபூருடன் மாலத்தீவுக்குச் சென்றார். அதோடு பாலிவுட் நடிகைகள், சாரா அலிகானும், ஜான்வி கபூரும் அடிக்கடி சுற்றுலா சென்று, அங்கு எடுத்துக் கொள்ளும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தனர். காஜல் அகர்வால் கணவருடன் தேனிலவுக்கு சென்றதில் தொடங்கி பிரணிதா சுபாஷ், வேதிகா, ரகுல் பிரீத் சிங், சமந்தா என பலர் மாலத்தீவில் உற்சாகமாக நாட்களை கழித்துவிட்டு திரும்பினர்.
ஹன்சிகா சமீபத்தில் மாலத்தீவில் எடுத்த கவர்ச்சி படங்களை பகிர்ந்தார். ஆண்ட்ரியா தற்போது மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு எடுத்த புகைப்படங்களையும், வீடியோவையும் அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதற்கு லைக்குகள் குவிந்து வருகின்றன.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!