கவினுக்கு ஜோடியாகும் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி | மீண்டும் இணையும் இருமுகன் கூட்டணி | மீசைய முறுக்கு 2 டீசருக்கு வரவேற்பு | அதிகரிக்கும் ரீ ரிலீஸ் படங்கள் : நல்லதா.... கட்டுப்பாடு வரணுமா...? | வரலட்சுமி இயக்கும் தெலுங்குப் படம் : 'சரஸ்வதி' டிரைலர் ரிலீஸ் | பெங்களூரு ஏஎம்பி சினிமாஸ் தியேட்டரில் மகேஷ்பாபு | சென்னையும், தமிழும்…. பிரபாஸ் நெகிழ்ச்சி… | 'டாக்சிக்' டீசர் : கன்னடத்தை விட தெலுங்கு, ஹிந்தி 'டாப் வியூஸ்' | 4 இடியட்ஸ் : ஒரே வீட்டுக்குள் நடக்கும் கதை | யார் ஹீரோ... திணறும் நெல்சன்... 47 ஆண்டுகளுக்கு பின் இணைந்த ரஜினி, கமல் பட அறிவிப்பு வீடியோ வெளியீடு |

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா தற்போது 'சாகுந்தலம்' என்ற படத்தில் நடித்து வருகிறார். அப்படத்திற்காக அவருடைய படப்பிடிப்பை முடித்துக் கொண்டுள்ளார். தன்னுடைய படப்பிடிப்பு முடிவடைந்தது குறித்து டுவிட்டரில் நெகிழ்ச்சிப் பதிவொன்றைப் பதிவிட்டுள்ளார்.
“சாகுந்தலம்' படப்பிடிப்பு நிறைவடைந்தது. என் வாழ்நாளில் இப்படம் என்னுடனேயே இருக்கும். என் சிறு வயதில் தேவதைக் கதைகளை நம்புவேன். இப்போதும் அது பெரிதாக மாறிவிடவில்லை. என் கனவை நனவாக்கியதில் குணா சார் என்னுடைய தேவதை காட்பாதர். அவர் இந்தப் படத்தைப் பற்றி என்னிடம் விளக்கிய போது நான் உடனடியாக அந்த அற்புத உலகத்திற்குள் நுழைந்துவிட்டேன், அது சாகுந்தலம் உலகம். அப்படி ஒரு உலகம் எங்குமில்லை. அதேசமயம் எனக்கு பயமாகவும், பதட்டமாகவும் இருந்தது. அந்த அழகை திரையில் அப்படியே காட்ட முடியுமா என்ற சந்தேகம் இருந்தது.
இன்று(நேற்று) நான் விடைபெறும் நிலையில், குணசேகர் சார் என்ற இந்த அற்புதமான மனிதர் மீது எனக்கு மிகுந்த அன்பும், நன்றியுணர்வும் இருக்கிறது. எனது எதிர்பார்ப்புகளை மீறி ஒரு உலகத்தை அவர் படைத்துவிட்டார். என்னுள் இருக்கும் குழந்தை மகிழ்ச்சியில் நடனமாடிக் கொண்டிருக்கிறது. நன்றி சார்,” என படத்தைப் பற்றியும், இயக்குனர் குணசேகர் பற்றியும் மிகவும் பாராட்டி நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.




