47 வருடங்களுக்குப் பிறகு கூட்டணி : எதையும் 'ஷேர்' செய்யாத ரஜினிகாந்த் | தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல்: புதிய தலைவராகும் ஜி.கே.எம். தமிழ்குமரன் | மீண்டும் ‛தி ராஜா சாப்' பட நிறுவனத்துடன் இணையும் பிரபாஸ்! | சிகிச்சைக்கு பிறகு அடியோடு மாறி விட்டேன்! -‛பாகுபலி' வில்லன் ராணா | பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கிடம் 10 கோடி கேட்டு மிரட்டல்! | ‛டிராகன்-2' அப்டேட் கொடுத்த பிரதீப் ரங்கநாதன்- அஸ்வத் மாரிமுத்து! | 70வது பிலிம்பேர் விருதுகள் - அதிக விருதுகளை வென்ற 'அமரன்' | இது கமல் ரஜினி பட கணக்கு | சிறிய பட்ஜெட் படத்தை இயக்கும் சமுத்திரக்கனி! | ‛கல்கி 2898 ஏ.டி' படத்தின் படப்பிடிப்பு துவங்கியது! |

தமிழ் சினிமாவில் முன்னனி காமெடி நடிகராக மட்டுமின்றி, இயற்கை ஆர்வலராகவும் இருந்தவர் மறைந்த விவேக். கடந்த ஏப்ரலில், மாரடைப்பு காரணமாக இறந்தார். இவர் நடித்த, யாதும் ஊரே யாவரும் கேளிர், அரண்மனை3 உள்ளிட்ட படங்கள் வெளியாக உள்ளன. இந்நிலையில் அமேசான் ஓ.டி.டி., தளத்தில் ‛lol-எங்க சிரி பார்ப்போம்' என்ற நிகழ்ச்சி 27 முதல் ஒளிபரப்பாக உள்ளது. இதில் மிர்ச்சி சிவாஉடன் இணைந்து நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியுள்ளார். இதற்கான படப்பிடிப்பு முன்பே நடந்து முடிந்துவிட்டது. இப்போது தான் இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்ப உள்ளனர். இந்த ரியாலிட்டி ஷோவில், பங்கேற்பவர்கள் சிரிக்காமல் இருக்க வேண்டும் என்பதே போட்டி.