லோகேஷ் கனகராஜ் - அல்லு அர்ஜுன் படம் டிராப் ஆகிறதா? | 'பெத்தி' படத்திற்கு டிக்கெட் உயர்வு ஆணை அளித்தது தெலுங்கானா அரசு | கில்லர் படத்துக்கு தொடரும் தடங்கல்கள் : அப்செட்டில் எஸ்.ஜே.சூர்யா | தமிழகத்தில் ‛கருப்பு' படத்தை பார்த்த ஒரு கோடி பேர் | ஜூன் 15ல் ஓடிடியில் வெளியாகும் ‛கெணத்த காணோம்' | முதல்வர் விஜய்யை சந்தித்து வாழ்த்து பெற்ற ஆர்.ஜே.பாலாஜி | எஸ்.ஜே.சூர்யா படப்பிடிப்பில் சோகம் : கேஸ் வெடித்து ஒருவர் பலி, மூவர் படுகாயம் | மகளுக்கு திருமணம் : முதல்வர் விஜய்க்கு அழைப்பிதழ் வழங்கிய குஷ்பு குடும்பத்தினர் | ராஷ்மிகா, கிரித்தி சனோன் படம் லெஸ்பியன் கதை இல்லை : இயக்குனர் விளக்கம் | ரவீணா டான்டன் தாயார் வீட்டில் 25 லட்சம் மதிப்பிலான நகைகள் திருட்டு |

அருவா சண்டை படத்தின் மூலம் நடிகராகவும், தயாரிப்பாளராகவும் அறிமுகமானவர் வி.ராஜா. தற்போது அவர் இயக்கி தயாரிக்கும் படம் பார்கவி. இதில் முகேஷ் என்ற புதுமுகத்தின் ஜோடியாக ஸ்ரேயா என்ற மாடல் அழகி நடிக்கிறார். சந்தோஷ் பாண்டி ஒளிப்பதிவு செய்கிறார்.
படம் பற்றி வி.ராஜா கூறியதாவது: பார்கவி வரலாற்று படமாகும், குறைந்த பட்ஜெட்டில் பிரமாண்டமான படத்தை என்னால் கொண்டு வர முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. அனுபவம் மட்டும் அல்ல நுனுக்கமான தொழில் நுட்பமும் தெரிந்தவர்கள் பணியாற்றுகிறார்கள். படத்தின் கதாநாயகன் முகேஷ் பட்டதாரி இளைஞன், கதாநாயகி ஸ்ரேயா மாடலிங் துறையில் நல்ல அனுபவம் உள்ளவர். இருவரும் நடிப்பு பயிற்சிகள் பெற்று வருகிறார்கள். விரைவில் மற்ற நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் அறிவிப்புடன் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. என்றார்.




