அடுத்தடுத்து திரைக்கு வரும் திரிஷா படங்கள் | மார்ச் 12ல் வெளியாகும் மேட் இன் கொரியா | தெலுங்கில் பிஸியாகும் ருக்மணி வசந்த் | சர்வதேச விருதினை வென்ற ‛பூங்' படக்குழுவை பாராட்டிய பிரதமர் மோடி | திரிஷ்யம் 3 படத்தில் நடிக்க மறுத்த வெங்கடேஷ் | 20 ஆண்டுகளுக்கு பின் தென்னிந்திய படத்தில் சஞ்சீதா ஷேக் ரீஎன்ட்ரி | மீண்டும் இணையும் ‛மை லார்ட்' கூட்டணி | புருஷன் படப்பிடிப்பு துவங்கியது | உதய்ப்பூர் புகைப்படங்களை தனித்தனியே பகிரும் விஜய் தேவரகொண்டா ராஷ்மிகா | புது முகங்களின் 'ஹைக்கூ ' |

அம்மன் போல மேக்கப் போட்டு நடிகை ரேகா எடுத்திருக்கும் புதிய போட்டோஷூட் சமூகவலைதளங்களில் வைரலாகி உள்ளது. பார்ப்பதற்கு ரேகா என அடையாளமே தெரியாத வகையில் அந்த புகைப்படங்கள் உள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோயினாக வலம் வந்த ரேகா பிக்பாஸ் சீசன் 4-ல் போட்டியாளராக கலந்து கொண்டார், முதல் ஆளாக விரைவிலேயே எலிமினேட் ஆனாலும், ரேகாவிற்கு அந்த நிகழ்ச்சி ஒரு கம்பேக் போலவே அமைந்தது. இதனை தொடர்ந்து சமூக வலைதளங்களில் பிஸியாக இயங்கி வரும் ரேகா, சொந்தமாக யூ-டியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார்.
இந்நிலையில், அவர் அம்மன் போல மேக்கப் போட்டு போட்டோஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். அந்த புகைப்படங்களை பார்க்கும் போது அதிலிருப்பது உண்மையான அம்மனின் ஓவியம் போல உள்ளதே தவிர, ரேகாவை பார்வையாளர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. அந்த அளவுக்கு தத்ரூபமாக அந்த புகைப்படம் வந்துள்ளது.
இந்த போட்டோஷூட் குறித்து தனது யூ-டியூபில் பேசியுள்ள ரேகா, அம்மன் கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்பது தனது நீண்ட நாள் ஆசை எனவும், கே.ஆர்.விஜயாவும், நயந்தாராவும் தான் தனது அம்மன் கதாபாத்திரத்திற்கான உத்வேகம் எனவும் அவர் கூறியுள்ளார்.