சிம்பு படத்தில் மிருணாள் தாக்கூர் சந்தானம் | திலீப் படத்தை இயக்குகிறேனா? 'மஞ்சும்மேல் பாய்ஸ்' இயக்குனர் மறுப்பு | 'டகாய்ட்' பட ரிலீஸை முன்னிட்டு ஹீரோவுடன் திருப்பதியில் தரிசனம் செய்த மிருணாள் தாக்கூர் | பிளாஷ்பேக்: புரட்சி நடிகரின் படத்தில், புலியுடன் சண்டையிட்ட புரட்சிப் பெண் திரைக்கலைஞர் | கஞ்சா பயன்படுத்தியதாக மலையாள நடிகரின் மகன் கைது ; தந்தையின் நம்பிக்கையை தகர்த்தார் | சென்சார் போர்டின் இரட்டை நிலைப்பாடு ; தி கேரளா ஸ்டோரி இயக்குனர் குற்றச்சாட்டு | துபாயில் சிக்கிக்கொண்ட பாலிவுட் நடிகை ; உதவி கேட்டு பிரதமருக்கு கோரிக்கை | பாடலை மாதக்கணக்கில் மெருகேற்றும் ஹாரிஸ்: இயக்குனர் ஏ.எல்.விஜய் | நடிப்பு உலகில் அடியெடுத்து வைத்த கிரிக்கெட் நடுவர் அனில் சவுத்ரி | ரஜினி, கமல் படத்தில் இந்த இளம் நடிகையா? |

கன்னடத்தில் கடந்த 2016-ம் ஆண்டு வெளியான கிரிக்பார்ட்டி படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தனா. இதையடுத்து தெலுங்கில் கீதா கோவிந்தம் படம் மூலம் ரசிகர்களை கவர்ந்த அவர், குறுகிய காலத்தில் நானி, மகேஷ் பாபு, அல்லு அர்ஜுன் போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து தனது மார்க்கெட்டை உயர்த்திக் கொண்டார்.
சமீபத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் படம் மூலம் தமிழில் அறிமுகமான ராஷ்மிகா, தற்போது பாலிவுட்டில் பிசியான நடிகையாக வலம் வருகிறார். அங்கு அமிதாப் பச்சன், சித்தார்த் மல்ஹோத்ரா போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழி படங்களில் நடித்து பிரபலமான ராஷ்மிகாவுக்கு சமூக வலைதளங்களிலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். ராஷ்மிகா அடிக்கடி தனது குடும்பத்துடன் இருக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிடுவார். இந்நிலையில் தனது குட்டி தங்கையுடன் சேர்ந்து நடிகை ராஷ்மிகா ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.




