விக்ரம் 63வது படத்தை இயக்கும் அறிமுக இயக்குனர் | என்னுடைய டேஸ்ட்டே வேற! சொல்கிறார் ஸ்ரீ லீலா | கவுரி கிஷனின் பேராசை | திரையரங்குகளில் வசூலை வாரி குவிந்த படங்கள்....இந்த வார ஓடிடி ரிலீஸ்.......! | மாத செலவுக்கு ரூ.6.5 லட்சம் மாதம்பட்டி ரங்கராஜ் தர வேண்டும்; ஜாய் கிரிசில்டா மனு | ராஷ்மிகாவுக்கு ஜோடியாக கன்னட நடிகர் ஏன் ? ; 'தி கேர்ள் பிரண்ட்' இயக்குனர் விளக்கம் | மகேஷ் பாபு குடும்பத்திலிருந்து ஒரு கதாநாயகி | தொடர்ந்து தெலுங்கு இயக்குநர்களிடம் கதை கேட்கும் சூர்யா | லோகேஷ் கனகராஜ் ஜோடியான வாமிகா கபி | மீண்டும் ரஜினியுடன் இணையும் சந்தானம் |

தேசிங் பெரியசாமி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் கதாநாயகியாக நடித்தவர் ரித்து வர்மா. அந்த படத்திலும் சரி அதற்கு முன்பு தெலுங்கில் அறிமுகமான பெல்லி சூப்புலு உள்ளிட்ட  படங்கள் அனைத்திலும் சரி பக்கத்து வீட்டுப் பெண் போல பாந்தமான நடிப்பால் அனைவரையும் கவர்ந்தார்
இந்த நிலையில் தற்போது தெலுங்கில் நாக சவுர்யாவுக்கு ஜோடியாக அவர் நடித்துள்ள வருடு காவலனே என்கிற படத்தில் ஒரு பாடலுக்கு அதிரடியான கவர்ச்சி ஆட்டம் ஆடியிருக்கிறார். இந்த பாடலின் டீசரை பார்த்தவர்கள் ரித்து வர்மாவா இப்படி என ஆச்சரியப்பட்டு போயிருக்கிறார்கள். லட்சுமி சவுஜன்யா என்பவர் இயக்கியுள்ள இந்த படத்திற்கு விஷால் சந்திரசேகரும், தமனும் இணைந்து இசையமைத்துள்ளனர். இந்த பாடலை ஸ்ரேயா கோஷல் பாடி உள்ளார்.
 
           
             
           
             
           
             
           
            