
மீண்டும் நடிப்புக்கு திரும்பிய பாவல் நவநீதன்
என்றாலும் பாவல் நவநீதன் சினிமாவுக்கு வந்தது படம் இயக்கத்தான். அதனால் நண்பர்களின் உதவியுடன் வி1 என்ற படத்தை இயக்கினார். இந்த படம் தியேட்டர்களில் அதிக வரவேற்பை பெறவில்லை. ஆனால் ஓடிடி தளத்தில் அதிக பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்தது. பாவல் இப்போது மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறார். தற்போது வலிமை, பூமிகா, டாணாக்காரன், படங்களில் நடித்து வருகிறார். இவர் நடித்துள்ள திட்டம் இரண்டு ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது. அடுத்த நவரசா ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது. இது தவிர ஸ்ரீதேவி சோடா சென்டர் என்ற தெலுங்குப் படத்தில் முக்கிய வில்லன் வேடத்திலும் நடித்திருக்கிறார்.
மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்துவது பற்றி அவர் கூறியதாவது: இயக்கம் தான் எனது பிரதான நோக்கம். முதல் படம் எனக்கு நல்ல பெயரை கொடுத்தது. அடுத்த படத்துக்கான முயற்சியில் இருக்கிறேன். என்றாலும் நடிக்க அதிக வாய்ப்பு வருகிறது. அதையும் பயன்படுத்திக் கொள்கிறேன். சிறியவேடம், பெரிய வேடம் என்றெல்லாம் நான் பார்ப்பதில்லை. ஒரு காட்சி வந்தாலும், ரசிகர்கள் பேசும்படி நடிக்க வேண்டும், என்பது தான் என் எண்ணம். என்றார்.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!