
பாக்சிங் படங்களை வைத்து பரவலாகும் மீம்ஸ்
"சார்பட்டா பரம்பரை" படத்தின் ஆஜானுபாகுவான ஆர்யாவின் பாக்சர் தோற்றமும், அவரை எதிர்க்கும் "வேம்புலி", "டான்சிங் ரோஸ்" ஆகியோரது தோற்றமும் ரசிகர்களுக்கு பல மீம்ஸ்களுக்கான சோர்ஸ் ஆக அமைந்துவிட்டது.
பலரும் பலவிதமான மீம்ஸ்களை தெறிக்க விட்டுக் கொண்டிருக்கிறார்கள். அந்த விதத்தில் ஒரு மீம்ஸ் கிரியேட்டர் தமிழ் சினிமாவில் இதுவரை வந்த பாக்சிங் படங்களை வைத்து ஒரு மீம்ஸ் செய்துள்ளது சமூக வலைத்தளங்களில் ரசிர்களைக் கவர்ந்துள்ளது.
விஜய் நடித்த "பத்ரி", ஜெயம் ரவி நடித்த "எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி", ஜெயம் ரவி நடித்த "பூலோகம்", சிவகார்த்திகேயன் நடித்த "மான் கராத்தே", ஜெய் நடித்த "வலியவன்", உள்ளிட்ட சில பாக்சிங் படங்களை "சார்பட்டா பரம்பரை" படத்துடன் ஒப்பிட்டு கலாய்த்து தள்ளியுள்ளார்கள்.
இனி வர உள்ள பாக்சிங் படங்களுக்கான ஒப்பீடாக, "சார்பட்டா பரம்பரை" படம் இருக்கும் என்றும் எதிர்பார்க்கலாம்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!