ஒத்தரோசாவில் இருந்து ஒரு நடிகன் | போட்டோ எடுக்க போய் நடிகராகியிட்டேன்! | பிளாஷ்பேக்: எம் ஜி ஆர் நடிக்க இருந்து, பின் கைவிடப்பட்ட அவரது “உடன்பிறப்பு” திரைப்படம் | உரிமைக்குரல், நட்புக்காக, ஜெயிலர் - ஞாயிறு திரைப்படங்கள் | சவுந்தர்யா பயோபிக் படத்தில் நடிக்க ஆசைப்படும் பிரியங்கா மோகன் | சிம்பு, தனுஷ் மோதல் இருக்கிறதா : சமுத்திரக்கனி பதில் | விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகாவின் ‛ரணபலி' படத்தின் முதல் பாடல் வெளியானது | துரந்தர் 2 படத்தின் முதல் விமர்சனத்தை வெளியிட்ட யாமி கவுதம் | மார்ச் 6ல் ஜீ5 ஓடிடியில் வெளியாகும் காந்தி டாக்ஸ் | பிரதமர் மோடியுடன் சந்திப்பு குறித்து ராஷ்மிகா நெகிழ்ச்சி |

மாஸ்டர் படத்தை அடுத்து நடிகர் கமல்ஹாசனை வைத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் படம் ‛விக்ரம்'. இந்தியன் 2 படம் பிரச்னையில் இருப்பதால் இப்படத்தில் நடிக்கிறார் கமல். இவருடன் விஜய் சேதுபதி, மலையாள நடிகர் பஹத் பாசில் ஆகியோரும் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். கமலே தயாரிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார். இதன் படப்பிடிப்பு இன்று(ஜூலை 16) துவங்கியது. கமல், விஜய் சேதுபதி உள்ளிட்டோர் படப்பிடிப்பில் பங்கேற்றனர். விரைவில் பஹத் பாசில் நடிக்க உள்ளார். அரசியல் கலந்த அதிரடி ஆக்ஷன் நிறைந்த போலீஸ் கதையில் இப்படம் தயாராக இருப்பதாக கூறப்படுகிறது. கமல் போலீசில் நடிக்கிறார். அதிலும் ஒரு கட்டத்தில் பார்வையிழந்த வேடத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.