நடிகராக அறிமுகமாகும் அபிஷன் ஜீவிந்த்துக்கு சிம்ரன் வாழ்த்து | 'ஜனநாயகன்' ரிலீஸ் தாமதம் : விஜய் கருத்து? | தி ராஜா சாப் : பிப்ரவரி 6ல் ஓடிடி ரிலீஸ் | ஆறு வருடங்களாக நடக்கவே முடியாத நான் மூன்றே நாட்களில் நடந்தேன் : அரவிந்த்சாமி | தொடரும் பட இயக்குனரின் புதிய படத்தில் வித்தியாசமான பெயரில் நடிக்கும் மோகன்லால் | ஜனநாயகன் சென்சார் பிரச்சனை : பாலிவுட் எம்பி நடிகர் ஆதரவு | தமிழக அரசின் விருதுகள் : தனுஷ், ஏஆர் ரஹ்மான் நன்றி | இன்னும் இசையை கற்பதால் உழைக்கிறேன் : ‛பத்மபாணி' விருது பெற்ற இளையராஜா பேச்சு | திருமண செய்திகளுக்கு பதில் சொல்ல மறுத்த மிருணாள் தாக்கூர் | தெலுங்கு சினிமா என்னை ஏமாற்றி விட்டது : ஐஸ்வர்யா ராஜேஷ் வருத்தம் |

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சித்தார்த். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் சித்தார்த், மத்திய அரசுக்கு எதிராக குரல் கொடுத்தும் வருகிறார். தொடர்ந்து சமூக வலைதளப் பக்கங்களில் தீவிரமாக இயங்கி வரும் இவர் பாலிவுட் நடிகர் திலீப் குமார் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து பதிவு செய்திருந்தார். மேலும் அந்த பதிவோடு திலிப் குமாரின் புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டு வந்தார்.
இந்த பதிவைப் பார்த்த ரசிகர் ஒருவர் புகைப்படத்தில் இருப்பவரை பார்க்கும்போது அக்ஷய்குமார் மாதிரியே இருப்பதாக தெரிவித்துள்ளார். இதனால் கடுப்பான சித்தார்த் டேய் சாவடிச்சிடுவேன் ஓடிடு என பதில் அளித்துள்ளார். மேலும் அந்த ரசிகர் நான் பார்ப்பதற்கு முகம் அப்படி இருக்கு என்று தான் சொன்னேன். நான் சொன்னதில் தவறு ஏதும் இல்லையே என பதிலளித்துள்ளார்.